வணக்கம்!
எப்பொழுதும் நான் வெளியில் சென்று வந்தாலும் அதன் சம்பந்தப்பட்ட விசயத்தை பதிவில் தருவது வழக்கம். என்னை சந்தித்த நண்பர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை அப்படியே பதிவில் கொடுத்துவிடுவது உண்டு.
ஒருவருக்கு குரு தசா நடந்தால் அவர் அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்ளலாமா அல்லது வேறு ஏதாவது வழிபாட்டை மேற்க்கொள்ளலாமா என்று நண்பர் கேட்டார். பொதுவாக இந்துக்கள் அனைவரம் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று வரலாம். ஒன்றும் தவறு இல்லை ஆனால் தொடர்ச்சியாக ஒரே கோவிலை தொடர்ந்து வழிபடும்பொழுது மட்டும் அந்தந்த தசாவிற்க்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
இன்றைய காலத்தில் குரு கிரகத்தை போல் சுத்தமாக மிகவும் ஆச்சாரியமாக இருக்கவேண்டும் என்றால் நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லாத ஒன்று என்றால் அதனை நம்புவது கடினம் தான். சுத்தமான பிராமணன் என்று ஒருவரையும் நாம் கண்டுபிடிப்பது கடினம்.
குரு தசா நடந்தாலும் நீங்கள் சுக்கிரனின் குருவை ஒத்தவர்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களை பின்பற்றினாலும் ஒன்று தவறு இல்லை. தாராளமாக அம்மன் வழிபாட்டை மேற்க்கொண்டு வரலாம்.
நவராத்திரி நெருங்கி வருகின்றது. நவராத்திரி ஹோமத்திற்க்கு முன்பு பதிவை செய்தவர்கள் பணத்தை செலுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நவராத்திரியை பொறுத்தவரை ஒன்பது நாட்கள் என்றாலும் முதல் மூன்று நாட்கள் விஷேசம். நவராத்திரி முதல் மூன்று நாட்களை மட்டும் நீங்கள் நன்றாக அம்மனை வணங்கினால் போதுமானது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment