Followers

Thursday, September 8, 2016

குருவின் அருள்


ணக்கம்!
          இந்த உலகத்தில் நம்மை விட்டு எது சென்றாலும் சரி நம்மோடு குருவின் தொடர்பு மட்டும் செல்லவே செல்லக்கூடாது அப்படி சென்றால் நமது வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைக்கு விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு விழித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

நம்முடைய குருவை காட்டக்ககூடிய ஒன்பதாவது வீடு மற்றும் குரு கிரகம் சரியாக இருந்தால் நமக்கு வழிகாட்ட ஒரு ஆள் இருப்பார். என்ன தான் நான் பெரிய வேலைகளை எல்லாம் செய்தாலும் எனக்கு பின்பு ஒரு குரு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. அவர் இல்லை என்றால் எதுவும் நடக்கவாய்ப்பில்லை.

நம்மை சுற்றி இருக்கும் சொந்தம் மற்றும் நட்பு எல்லாம் எதோ ஒரு விருப்பதற்க்காக நம்மை சுற்றி இருப்பார்கள். நம்முடைய குரு மட்டும் நமது முன்னேற்றத்திற்க்காக இருப்பார். எதுவும் எதிர்பார்க்காமல் நமக்கு நல்ல வழியை சொல்லிக்கொண்டு இருப்பார்.

குரு கிரகம் சரியில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எந்த ஒரு வழிகாட்டியும் இல்லாமல் நிறைய கஷ்டபடுவார்கள். நமது வாழ்க்கைக்கு குரு அவசியம் தேவையான ஒருவர்.

இன்றைய காலத்தில் நிறைய பேர் இறைவனோடு ஐக்கியமான அதாவது இறந்தவர்களை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். அது தவறு இல்லை என்றாலும் நாம் நமக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி அவர்களோடு கலந்துரையாட ஒரு உயிரோடு இருக்கும் மனிதர் அவசியம் தேவை. 

ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு வழிகாட்ட ஒரு ஆளை நாம் வைத்திருக்கிறோமா என்பதை மட்டும் பாருங்கள். அந்த ஆளை இதுவரை தேடி கண்டுபிடிக்கவில்லை என்றால் உடனே அந்த ஆளை தேடி உங்களுக்கு ஆலோசனை செய்ய வைத்துக்கொள்ளுங்கள். எல்லாம் நல்லவையாக உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: