Followers

Friday, September 30, 2016

சுக்கிரன்


வணக்கம்!
          இன்று பல பிராமணர்களுக்கு கூட சுக்கிரன் தான் குருவாக இருக்கின்றார். ஏன் என்றால் மிகுந்த ஆச்சார்யத்தோடு ஒருத்தர் இருப்பது கடினம் என்பதால் இப்படி சொல்லுகிறேன்.

நான் பள்ளியில் படித்தபொழுது ஐயர் வீடுகளில் தினமும் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருப்பார்கள். நிறைய விஷேசம் நடந்துக்கொண்டே இருக்கும். இன்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.

பிராமணர்களுக்கு உள்ள நியதிபடி நடக்கவேண்டும் என்றால் அவர்கள் வேலைக்கு கூட செல்லமுடியாது. அதனால் தான் அவர்களும் சுக்கிரனின் காரத்துவம் உடையவர்களாக இருக்கின்றனர்.

பிராமணர்கள் இதற்காக வருந்தவேண்டாம் காலம் அப்படி இருக்கும்பொழுது என்ன செய்யமுடியும். நீங்களும் சுக்கிரன் காரத்துவம் உடைய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம் அதனால் உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படாது.

பழைய காலத்திலும் பிராமணர்கள் அம்மனை எல்லாம் வழங்கி வந்துள்ளனர். இன்றைய காலத்தில் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது என்று சொல்லலாம். பெரும்பாலும் இன்று அனைவருக்கும் குருவாக இருப்பவர் சுக்கிரன் தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: