வணக்கம்!
தைலக்குளியலைப்பற்றி ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தேன். தைலக்குளியலை எல்லாம் குளிக்கிறீர்களா என்பதற்க்கு மறுபடியும் ஞாபகம் ஊட்டுவதற்க்கு தான் இந்த தகவல் பேசிவேண்டியுள்ளது என்பதால் இதனை மறுமுறை சொல்லுகிறேன்.
வெள்ளிக்கிழமை மதியம் தைலக்குளியலை செய்ய சொல்லிருந்தேன். ஒரு சிலர் தைலத்தை தயாரித்தால் என்ன என்று கேட்டார்கள். உங்களுக்கு பிடித்த தைலத்தை நீங்கள் தயாரித்துக்கொள்ளலாம். சுக்கிரனுக்கு சம்பந்தப்பட்டு செய்கின்ற ஒரு பரிகாரம் தான் இது என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.
சுக்கிரன் என்று சொன்னாலே அது மூலிகை சம்பந்தப்பட்ட ஒன்றாக தானே இருக்கும். எந்த ஒரு மூலிகையும் நீங்கள் வைத்து இந்த தைலத்தை தயாரித்து அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தான் என்று வரையறை கிடையாது. எல்லாம் மூலிகைகளும் சுக்கிரனுக்கு கீழ்தான் வருகிறது. அதனால் எந்த மூலிகைகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தைலக்குளியலை பயன்படுத்தும்பொழுது கொஞ்சமாக பயன்படுத்தி படிப்படியாக அதனை அதிகரித்துக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு மூலிகைகளை உடல் ஏற்றுக்கொள்ளாது. அதனால் படிப்படியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தைலக்குளியல் மட்டும் சுக்கிரனுக்கு கிடையாது. நிறைய விசயங்கள் சுக்கிரனுக்கு என்று பரிந்துரை செய்வது உண்டு. அதனை எல்லாம் நீங்கள் என்னை சந்திக்கும்பொழுது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment