வணக்கம் !
சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்து முடித்துவிட்டு இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். பல நண்பர்கள் தொடர்புக்கொண்டனர் அனைவரையும் சந்திக்கமுடியவில்லை அடுத்தமுறை வரும்பொழுது உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.
சந்திரனை பற்றி பார்க்கலாம். சந்திரன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் பல ஊர்களுக்கு சென்று வரமுடியும் என்று ஏற்கனவே சொல்லிருந்தேன். என்ன தான் இன்று நெட்டில் தகவல்களை சேகரித்தாலும் நாம் நேரில் சென்று பார்த்து அனுபவித்து வரும் தகவல்கள் என்பது ஒரு அற்புதம் என்றே சொல்லலாம்.
பழைய காலத்தில் எல்லாம் வாகன வசதி எல்லாம் கிடையாது. அந்த காலத்தில் ஒவ்வொரு இடத்திற்க்கும் நடந்து சென்று இருக்கின்றார்கள். ஒருவர் நன்றாக நடந்து செல்வதற்க்கும் சந்திரன் தான் காரணமாக இருந்து இருக்கின்றது. ஒருவருக்கு சந்திரன் நன்றாக இருந்தால் நடப்பதற்க்கு அலுப்புபடமாட்டார்.
இன்று சொகுசான வாகனவசதி எல்லாம் வந்தாலும் அடுத்து ஒரு தொலைவு தூர ஊர்க்கு சென்று வந்தாலும் பலருக்கு அது பெரிய உடல்வலியே எடுத்துவிடும் ஆனால் சந்திரன் நன்றாக இருக்கும் நபர்களுக்கு பல ஊர்களுக்கு தொடர்ந்து பயணம் சென்றுவருவார்கள்.
உங்களின் ராசிக்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் வரும்பொழுது அதாவது கோச்சாரபடி வரும் நேரத்தில் நீங்கள் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிவரும். வீட்டிலேயே அடைப்பட்டு இருப்பவர்களுக்கு கூட ஒரு பயணத்தை கொடுக்கும்.
உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் நீங்கள் அடிக்கடி பயணம் மேற்க்கொண்டு பல நல்ல தகவல்களோடு உங்களின் வாழ்க்கையை நன்றாக செலுத்தமுடியும்.
நவராத்திரி ஹோமம் செய்வதற்க்கு பங்களிப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment