Followers

Friday, September 2, 2016

சொகுசுக்காரன் மனக்காரன் சம்பந்தம்


வணக்கம்!
          சுக்கிரனின் கிரகம் சந்திரனோடு சேரும்பொழுது அவர்கரளின் மனதில் எப்பொழுதும் சந்தோஷத்தோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து அவர்கள் சந்தோஷத்தோடு வாழ்வார்கள்.

சந்திரனை பொறுத்து தான் மனது என்பதால் சுக்கிரனோடு சேரும்பொழுது சுகபோக வாழ்வை மனது நாடும். அவர்கள் அதிகம் விரும்புவது சுகபோக வாழ்க்கையாக இருக்கும்.

ஒரு சிலர் எந்த நேரமும் அவர்களின் மனதில் சோகமாக இருப்பார்கள் அல்லவா அதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு சந்திரன் சுக்கிரன் சேர்க்கை காரணமாக இருகின்றது.

ஒரு சிலருக்கு சினிமா பார்ப்பதற்க்கு மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு சினிமாவா அது எல்லாம் எவன் பார்ப்பான் என்று சொல்லுவார்கள். சினிமா பார்ப்பதற்க்கு பிடிக்கும் என்று சொல்லுபவர்களுக்கு சுக்கிரனோடு சந்திரன் சேர்ந்து இருக்கின்றது அர்த்தம்.

இன்றைய காலத்தில் மால்களில் படம் பார்க்க அதிக பேர் ஆசைப்படுகின்றார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் சுக்கிரன் சந்திரனோடு இணைந்து இருக்கும் என்று சொல்லுவதை விட சுக்கிரனின் வீட்டிற்க்கு சந்திரன் செல்லும்பொழுது நடக்கும்.

சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து ஜாதகத்தில் இருக்கும்பொழுது அவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் ஆடம்பரமான ஒரு வாழ்க்கையாக இருக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கை அப்படி அமையவில்லை என்றாலும் தன்னுடைய உடை பாவனையில் ஆடம்பரத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: