Followers

Thursday, September 15, 2016

வேலை கிடைக்க என்ன செய்யலாம்?


ணக்கம்!
          ஒரு சில ஜாதகங்களில் ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் வந்து அமர்ந்தால் அவர்களுக்கு வேலை என்பது பெரிய கடினமாக தான் இருக்கும். என்னிடம் இப்படிப்பட்ட பல ஜாதகங்கள் வந்து இருக்கின்றன அதனை எல்லாம் சரிசெய்து கொடுப்பதற்க்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ஒரு சிலருக்கு குரு பகவான் வேலைக்கு காரணமாகிவிடுவார் அவர் இப்படி அமர்ந்தால் அதனை சரி செய்வதற்க்குள் அவ்வளவு கடினமாக இருக்கும். நாம் எப்படியும் ஒவ்வொரு ஜாதகத்தையும் சரி செய்துக்கொடுப்பது தான் நமது வேலை தான் என்றாலும் கொஞ்சம் அதிக நாள் எடுத்து வேலை நடக்கிறது.

இன்றைக்கு எல்லாருக்கும் வேலைக்கு செல்லவேண்டும் என்பது ஒரு கட்டாயமான சூழ்நிலை இருக்கின்றது. வேலைக்கு செல்லவேண்டும் என்றாலும் அதற்கு ஜாதகம் கைகொடுக்கவேண்டும் அல்லவா. ஜாதகம் சாதகமாக இருந்தால் தான் நல்ல வேலையும் கிடைக்கும்.

உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உடனே ஜாதகத்தை எடுத்து பாருங்கள். ஜாதகத்தை பார்த்தவுடன் அதில் ஆறாவது வீட்டையும் நன்றாக பாருங்கள். ஆறாவது வீடு கொஞ்சம் சப்போர்ட் செய்தால் நீங்கள் வேலைக்கு செல்லமுடியும். அப்படி இல்லை என்றால் வேலை கிடைப்பது கடினமாக இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி மற்றும் ஆறாவது வீட்டு அதிபதி இருவரையும் நாம் சரி செய்தாலே பெரும்பாலும் நல்ல வேலைக்கு சென்றுவிடலாம். இது எல்லாம் கொஞ்சம் கடினமான ஒன்று தான் ஆனால் விடாமுயற்சி வெற்றியை தரும்.

நமது நண்பர்கள் வேலை கிடைக்கவில்லை என்றால் என்னை நேரில் சந்தித்து அதற்கு என்ன செய்யலாம் என்பதை ஆலோசனை கேட்டு அதன் படி செய்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: