வணக்கம்!
பொதுவாகவே அனைவருக்கும் இயற்கையிலேயே கோபம் இருக்கும். கோபத்தை மாற்றி அதனை நல்வழியில் செல்வதற்க்கு பல வழிகளை கையாண்டு ஒவ்வொருவரும் நன்றாக வந்திருப்பார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்றாலும் செவ்வாய் நன்றாக இருந்தாலும் கூட செவ்வாய் கிரகம் ஒரு சி்ல நேரத்தில் நமக்கு பெரிய வாய்ப்பை தவறவிடுவதற்க்கு காரணமாக இருந்திருக்கும். நாம் இதனை கவனிக்கவில்லை என்றாலும் உண்மை இதுவாக தான் இருக்கும் அதாவது செவ்வாய் கிரகத்தால் அந்த வாய்ப்பு போய்விட்டது என்று அர்த்தம்.
நான் நிறைய நல்வாய்ப்பை எல்லாம் தவறவிட்டதற்க்கு காரணம் செவ்வாய்கிரகம் தான் என்பது எனக்கு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்தது. அதன் பிறகு தான் இதனை சரிசெய்து கொண்டு பலருக்கு நல்வழியும் காட்ட முடிந்தது அவர்களையும் இதனை செய்ய சொல்லிருந்தேன்.
உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஒரு ஒன்பது வாரத்திற்க்கு நீங்கள் செவ்வாய் விரதத்தை மேற்க்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் நான் செவ்வாய் விரதத்தை மேற்க்கொள்கிறேன் என்றாலும் பரவாயில்லை.
இந்த விரதத்தை செய்து முடித்துவிட்டால் போதும் வாழ்வில் ஏற்றத்தை காணலாம். எனக்கு கோபமே வரவில்லை என்று சொல்லுபவர்கள் கூட இதனை செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment