வணக்கம்!
என்னைப்பொறுத்தவரை என்னை தேடி வரும் சோதிட வாடிக்கையாளர்கள் கொஞ்சநாள்கள் என்னோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அதாவது கொஞ்சநாள்கள் அவர்கள் போனில் தொடர்புக்கொண்டு அல்லது மெயிலில் தொடர்புக்கொண்டு அவர்களை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும் ஒரு ஆறு மாதத்திற்க்குள் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழுவதற்க்கு ஏற்பாடு செய்துக்கொடுத்துவிடுவேன்.
இங்கு வரும் அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்பதை தான் நான் விரும்புவேன். நம்மால் பிறர்க்கு நல்லது நடந்தால் அது தான் நான் செய்த புண்ணியம் என்பது என்னுடைய ஆழமான ஒரு நோக்கம்.
ஒருவருடைய ஜாதகத்தை வாங்கி ஒரு சில வேலையை செய்ய தொடங்கினால் அது நல்ல மாற்றம் வருவதற்க்கு ஆறு மாதத்திற்க்கு மேல் ஆகும். கிரகங்களின் சுழற்சி அப்படி இருக்கும். திடீர் என்று நடக்கவேண்டும் என்பவர்களுக்கு சந்திரனை வைத்து மட்டும் வேலை செய்துக்கொடுப்பது உண்டு. நிரந்தரமான ஒரு முன்னேற்றத்தை காண்பவர்களுக்கு கொஞ்ச நாள்கள் ஆகும்.
ஜாதககதம்பத்தை நன்றாக உன்னிப்பாக படித்து வருபவர்களுக்கு அதனை கொண்டே பல முன்னேற்றத்தை காணமுடியும். நீங்கள் இருக்கும் அவசரத்தில் இதனை எல்லாம் அந்தளவுக்கு கவனிக்க மாட்டீர்கள். நன்றாக படித்தால் உங்களை நீங்களே சரிசெய்துக்கொள்ளமுடியும்.
நாம் செய்துக்கொண்டு இருக்கின்ற காரியம் எல்லாம் ஏதோ ஒரு கிரகத்தின் வழியாக தான் செய்கிறோம் என்று எண்ணி அதனை நன்றாக கவனித்தாலே போதும். நமக்கு அது நல்லதா கெட்டதா என்று தெரிந்துவிடும்.
நன்றாக கவனிக்கும்பொழுது இந்த கிரகத்தின் பிடியில் நாம் அகப்பட்டு கொண்டு இருக்கிறோம் இது நல்லதா அல்லது கெட்டதா என்பதை தெரிந்துக்கொண்டு நாம் அதற்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக்கொள்ளலாம். இது எல்லாம் நம் கையில் இருக்கின்றது.
எல்லாவற்றுக்கும் புத்திசாலிதனமும் பொறுமையும் இருந்தால் போதும் கண்டிப்பாக நாம் முன்னேற்றம் காணமுடியும். இதுவும் உங்களுக்கு இருக்கின்றதா என்பதை கவனியுங்கள்.
பல ஆன்மீக பயிற்சிகள் மற்றும் எளிதில் உங்களை மாற்றும் வழிகள் எல்லாம் நமது கட்டண சேவையில் இருக்கின்றது உடனே அதில் இணைந்து உங்களின் வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment