வணக்கம்!
சென்னையில் என்னை சந்தித்த நபர் ஒருத்தர் சொன்னார். சார் ஒவ்வொரு சோதிடர்களும் உடனே என்னிடம் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள் நீங்கள் கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லுகிறீர்களே என்று சொன்னார்.
அவரிடம் அதற்க்கான விளக்கத்தை கொடுத்தேன். இன்றளவும் நம்மை தேடி வரும் அனைவருக்கும் முதலில் பரிகாரத்தை ஒரு காலும் பரிந்துரை செய்வதில்லை. பரிகாரம் செய்வதாக இருந்தால் கூட உங்களின் ஊரில் யாராவது இருந்தால் அங்கு போய் இப்படி செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது உண்டு.
முக்கால்வாசி பரிகாரம் ஒரு சில பிரசித்துபெற்ற கோவிலுக்கு சென்று வந்தாலே அது நடந்துவிடும். அந்த கோவிலுக்கு செல்லாமல் அவர் அவர்களின் நகரத்திற்க்கு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்துவிட்டு எனக்கு நடக்கவில்லை என்று சொல்லுவார்கள்.
பிரசித்து பெற்ற கோவில்களில் உள்ள சக்தி சாதாரண கோவில்களில் இருப்பதில்லை என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்றுவர சொல்லுவது உண்டு. கடைசி நேரத்தில் தான் பரிகாரம் செய்வதை ஊக்குவிக்கிறோம்.
உங்களால் முடிந்தளவு முயற்சி செய்துவிட்டு அதன் பிறகு பரிகாரபூஜை பக்கம் செல்லலாம். ஒரு சில கோவில்களுக்கு நாம் செல்லும்பொழுது நமது ஜாதகத்தில் உள்ள தோஷம் முழுமையாக போய்விடும்.
பரிகாரபூஜை என்பது கொஞ்சம் அதிகளவில் எந்த விசயத்தையும் எதிர்நோக்கும் நண்பர்களுக்கு மட்டும் பரிகாரபூஜையை சொல்லுவது உண்டு. அனைவரும் பரிகாரபூஜை என்று கேட்கவேண்டியதில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment