Followers

Thursday, June 1, 2017

அகர்மா (Akarma)


ணக்கம்!
          ஜாதகத்தை பார்த்தோம் அதற்கு பரிகாரம் சொன்னோம் என்று இருந்துவிடாமல் உங்களுக்கு தேவையான நிறைய விசயங்களை சொல்லவேண்டும் என்பதற்க்காக இதனை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

நீங்கள் ஒன்றை செய்தால் அதன் பேர் கர்மா. நீங்கள் எதையும் செய்யாமல் சும்மா இருந்தால் அதன் பேர் அகர்மா. அகர்மாவை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. கர்மாவைப்பற்றி தான் அனைவரும் சொல்லுவார்கள். அகர்மாவைப்பற்றி சொல்லுவது கிடையாது.

செல்போனை நோண்டிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அங்கு கர்மா வேலை செய்வதில்லை. வேலை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம் என்றால் கர்மாவை விட்டு விலகி போக முயற்சி செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். உங்களின் கர்மாவோடு நீங்கள் இல்லை என்று அர்த்தம். நீங்கள் ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்பொழுது உங்களின் கர்மாவோடு தொடர்புடையராக இருப்பீர்கள்.

எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் நிலைக்கு அகர்மா என்று பெயர். கர்மா தேங்கி இருக்கின்றது அது இப்பொழுதும் வரலாம் அல்லது எப்பொழுது வரலாம். அது வராமல் இருப்பதற்க்கு அகர்மா என்று பெயர்.

நீங்கள் ஒரு குருவிடம் சென்றால் அவர் இதனைப்பற்றி எல்லாம் சொல்லுவார். நீங்கள் எதையாது செய்துக்கொண்டே இரு ஆனால் அதில் எந்த கர்வமும் கொல்லாதே என்பார். இந்த வேலையை நான் தான் செய்தேன் என்று இருக்காதே என்பார்.

சும்மா இருந்தால் பிரச்சினை. தேங்கி கொண்டு இருக்கும் கர்மா நீங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது வந்து குவிந்துவிடும். ஊரில் சும்மா இருப்பார்கள். திடிர் என்று ஒரு தொழிலை தொடங்குவார்கள். கடுமையான பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். தேங்கி கொண்டு இருந்த கர்மா உங்களை தாக்க ஆரம்பித்துவிடும்.

செயலையும் செய்யவேண்டும். கர்மாவை தேங்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இது ஒரு ஆன்மீகவாதியால் தான் எளிதாக செய்யமுடியும். உங்களால் புரிந்துக்கொள்ளமுடிந்தால் நீங்களும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Thanks for this New information.
I need some clarification sir.
Few days back, in one blog, you have told to not always be with Mobile or TV , because that will not let your Karma to go out.For that, You have suggested to sit simple and face the thoughts waves which you get when alone, so that our Karma will be reduced. I see some controversy between this and today's Akarma post. Please clarify , If I am wrongly understood any.
Thanks,
KJ