வணக்கம்!
ஒருவருக்கு ஐந்தாவது வீட்டில் சனி இருந்தால் அவர் முன்ஜென்மத்தில் ஒரு குழந்தையை கொன்றதாக பழைய பதிவில் சொல்லிருப்பேன். அதாவது பூர்வபுண்ணியம் என்ற தொடரை எழுதியிருந்தேன். அதனை தேடிப்படித்து பாருங்கள் அதில் எழுதியிருப்பேன்.
ஒரு குழந்தையை கொன்றதாக அல்லது குழந்தைக்கு ஊனம் விளைவித்தாக அந்த ஜென்மம் இருந்திருக்கும். குழந்தையை எல்லாம் இந்த காலத்திலேயே எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள் அந்த காலத்தில் எல்லாம் கண்டிப்பாக கொன்றும் இருப்பார்கள். அதனை சரி செய்ய இந்த பிறப்பு எடுத்து இருப்பார்கள்.
ஒரு தகப்பனாக அல்லது தாயாக முன்ஜென்மத்தில் இருந்திருப்பார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு இடைஞ்சல்கள் கொடுத்த காரணத்தால் இந்த ஜென்மத்தில் வாரிசுகளுக்கு அலையும் ஒரு நிலையை இறைவன் கொடுத்திருக்கிறார். இதனை இந்த ஜென்மத்தில் நிவர்த்தி செய்ய வழி செய்துக்கொள்ளுங்கள்.
உங்களின் அருகில் அல்லது ஏதாவது ஒரு இடத்தில் உள்ள அனாதை குழந்தைகள் அல்லது உடல் ஊனம் முற்ற குழந்தைகளுக்கு உங்களால் ஆன உதவியை செய்து வாருங்கள்.
நிறைய புண்ணிய நதியில் நீராடுங்கள் மற்றும் நிறைய சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். நல்ல புண்ணியம் உங்களுக்கு கிடைத்து உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.
ஒரு சிலருக்கு குழந்தைகள் இருக்கும். குழந்தைகள் இருந்தாலும் விபத்தில் மரணம் அடைய வாய்ப்பு உண்டு அல்லது ஊனம் அடையவும் வாய்ப்பு உண்டு அதனால் மேலே சொன்ன விசயத்தை செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment