வணக்கம்!
வெள்ளிக்கிழமை என்ற சுக்கிரனுக்கு உரிய நாளாக இருக்கின்றது. வெள்ளிக்கிழமை ஒரு ஆண்குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்க்கு ஆகாது என்பார்கள். வெள்ளிக்கிழமை ஆண்குழந்தை பிறக்ககூடாதா என்று ஒரு கேள்வி வந்தது.
வெள்ளிக்கிழமை ஆண்குழந்தை பிறந்தால் அது குடும்பத்தை எல்லாம் கெடுக்காது. வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்குரிய நாளாக இருப்பதால் அது பெண்களின் சாயல் வந்துவிடும் என்பார்கள். அந்தந்த கிழமைக்கு ஏற்ப அந்த கிழமையின் அதிபதியின் காரத்துவம் இருக்கும்.
வெள்ளிக்கிழமை சுக்கிரனின் நாளாக இருப்பதால் அது ஆண்குழந்தையாக பிறந்தால் அது பெண்ணின் இயல்பை பெற்றுவிடும் என்ற பயத்தால் அப்படி இருக்கும். வெள்ளிக்கிழமை பிறந்த ஆண்குழந்தை நன்றாக இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.
ஒரு சில இடத்தில் வெள்ளிக்கிழமை பிறந்த ஆண்குழந்தையால் தந்தைக்கும் ஆபத்து என்பார்கள். அதுவும் தவறான ஒன்று தான். ஜாதகத்தில் அமரும் கிரகநிலைகளே ஒருவரின் வாழ்வை நிர்ணிக்கும். கிழமைகளின் காரத்துவம் அந்தளவுக்கு இருக்காது. கவலைபடதேவையில்லை.
உங்களின் குழந்தை ஆணாக இருந்து வெள்ளிக்கிழமை பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும். உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்கள் முருகனை நன்றாக வழிபட்டால் நீங்கள் பயப்படும் விசயம் நடக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment