Followers

Monday, June 19, 2017

அனுபவம்


வணக்கம்!
         கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு காலையில் தான் தஞ்சாவூர் வந்தேன். தொடர்ச்சியாக பயணம் செய்த களைப்பில் சற்று ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டு தற்சமயம் வேலையை தொடங்கிவிட்டேன்.

ஒவ்வொருவரும் நேரில் சந்திக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து விசயங்களையும் நம்மால் சொல்லமுடிகிறது. பதிவுகளில் எழுவது என்பது ஒரு ஐம்பது சதவீ்தம் என்றால் நேரில் ஒரு ஐம்பது சதவீதத்தை வழங்கமுடிகிறது.

பதிவுகளில் எழுதுவதை மட்டும் வைத்து ஒரளவு வாழ்விற்க்கு தேவையானவற்றை செய்துக்கொள்ளலாம். முழுமையான ஒரு வாழ்வு வாழவேண்டும் என்றால் உங்களுக்கு தேவையானவற்றை நேரில் சந்திக்கும்பொழுது அதனை பெற்றுக்கொள்ளமுடியும்.

பணத்தை வைத்து தான் அது இருக்கும் என்பதல்ல. ஒரு நட்பாக அதனை சந்தித்து அந்த சூட்சம ரகசியங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் உள்ளவர்கள் மறுமுறை மறுமுறை என்னை சந்திப்பதற்க்கு இது தான் காரணமாக இருக்கமுடியும்.

நீங்களே செய்கின்ற பல வழிபாட்டு முறை மற்றும் நீங்கள் பின்பற்றும் ஆன்மீகவிதிக்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சத்தையும் பெறமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் நான் வரும்பொழுது என்னை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இந்த முறை பயணத்தில் பல பேர்கள் இதனை தெரிந்துக்கொண்டனர். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: