வணக்கம்!
அகர்மாவை படித்துவிட்டு பலர் புரியவில்லை என்றனர். ஒரு ஆன்மீகவாதி தேடுதலை நிறுத்தவே கூடாது அப்படி நிறுத்திவிட்டால் அவன் ஆன்மீகவாதியே கிடையாது. தேடிக்கொண்டே இருக்கவேண்டும்.
நீங்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் இணைந்து இருந்தால் அது கர்மாவாக இருக்கமுடியாது. நீங்கள் ஏதோ ஒரு வேலையை செய்துக்கொண்டு இருக்கவேண்டும் அப்பொழுது கர்மா நடக்கிறது என்று அர்த்தம்.
வீட்டில் இருக்கின்றீர்கள் போர் அடிக்கிறது என்று நீங்கள் டிவியை ஆன் செய்து பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். போர் அடிக்க ஆரம்பிப்பது உங்களின் கர்மா வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். நீங்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டு அதனை விட்டு செல்ல நினைத்து டிவி அல்லது மொபைல் பக்கம் சென்றுவிடுகின்றீர்கள்.
போர் அடிக்க ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து அதனோடு இருந்தால் ஏகாப்பட்ட வெறுப்பு வந்து நீங்கள் ஒரு வழி ஆகிவிடுகின்றீர்கள். எப்படி ஆனாலும் பரவாயில்லை என்று அதனோடு இருந்தால் கொஞ்ச காலத்திற்க்கு பிறகு உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க ஆரம்பித்துவிடும். உங்களின் வெறுப்பை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் அது கர்மாவோடு நீங்கள் தொடர்பில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அது சும்மா கவனிக்கவில்லை. அதிபயங்கர கர்மாவோடு மோத ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஒரு புயல் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த புயலை நிற்க வைத்துவிட்டு நீங்கள் டைவர்ட் செய்து பொழுதுபோக்கிக்கொண்டு இருப்பீர்கள். புயல் என்பது கர்மா , வந்த புயல் வந்தது தான். அந்த புயல் தேங்கி நின்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை அகர்மா என்று அர்த்தம்.
பொழுதுபோக்கை விட்டுவிட்டு உங்களின் வேலை என்று ஒரு வேலையை நீங்கள் ஆரம்பித்தால் புயல் அதிவேகத்தில் வந்து தாக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நீங்கள் தடுமாற ஆரம்பித்துவிடுவீர்கள்.
சும்மா பத்து நாட்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு உங்களோடு வாழ ஆரம்பியுங்கள். பத்து நாளிலேயே நிறைய மாற்றம் உங்களுக்கு வரும். எல்லாம் பிராடிக்கலாக செய்யவேண்டிய ஒன்று. அதனை எழுத்தில் எழுதுவது கடினமாக இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Understand sir.. Nice explanation.. Thanks a lot sir. .
Post a Comment