Followers

Monday, June 26, 2017

பூர்வபுண்ணியம்


ணக்கம்!
          உங்களின் குலதெய்வம் உங்களுக்கு பிரச்சினை என்றால் உங்களின் ஐந்தாவது வீடு பிரச்சினை என்று அர்த்தம். ஒருத்தருக்கு காதல் திருமணம் அமைந்தாலும் அவர்க்கு ஐந்தாவது வீடு பிரச்சினை என்று அர்த்தம். காதல் திருமணம் ஒன்று தவறு இல்லை என்றாலும் அது உங்களின் குலதெய்வத்திற்க்கு ஆகாது என்பதால் இதனை சொல்லுகிறேன்.

வாழ்க்கையில் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை அலைய வேண்டியிருக்கு எந்த நேரமும் அலைந்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றாலும் உங்களின் பூர்வபுண்ணியம் உங்களுக்கு கைகொடுக்கவில்லை என்று தான் அர்த்தம்.

நமது ஜாதககதம்பத்தில் கூட இப்படிப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள். பெரியளவில் ஆசைப்பட்டு ஒன்றுமே நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இவர்களுக்கு எல்லாம் கர்மா அதிகம் என்று தான் சொல்லவேண்டும். புண்ணியம் கிடைக்கவில்லை என்றால் அது கர்மா தானே.

லைப் தான் செட்டில் ஆகவில்லை ஒரு திருமணம் செய்தாலும் நன்றாக இருக்கும். அதாவது வாழ்க்கை மாறிவிடும் என்று நினைத்து திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தால் அதுவும் நடக்கவில்லை என்றால் அதற்கும் ஐந்தாவது வீடு தான் பிரச்சினை என்று சொல்லவேண்டும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடந்து அந்த திருமண வாழ்வில் துணையாக வந்தவரே வாழ்க்கையை கெடுக்கிறார் என்றாலும் அதாவது உயிரை எடுக்கிறார் என்று சொல்லுவார்கள் அல்லவா அதற்கும் இந்த ஐந்தாவது வீடு தான் பிரச்சினை.

ஒரு தொழில் செய்து அந்த தொழிலில் லாபம் கிடைக்காமல் நிறைய கடன்களை கொடுத்து நமது பெயரையும் வீண் செய்தால் அதற்கும் இந்த ஐந்தாவது வீடு தான் பிரச்சினை என்று சொல்லவேண்டும்.

மேலே சொன்ன அனைத்தும் உங்களின் கர்மா வழியாக தான் அனைத்தும் நடக்கிறது. அதாவது ஐந்தாவது வீட்டை வைத்து தான் நடக்கிறது. உங்களின் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: