வணக்கம்!
நண்பர் ஒருவரின் கேள்வி இது தான் முன்ஜென்மத்தைப்பற்றி அறிவதற்க்கு எதற்கு என்று கேட்டார். அதனால் நமக்கு என்ன பயன் நடக்கும் என்றார்.
ஒருவரின் முன்ஜென்மத்தை வைத்து தான் இந்த ஜென்மத்தில் உள்ள நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஜென்மத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கும் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதற்க்காக தான் இதனை எழுதுகிறேன்.
உண்மையில் பல இடங்களில் பரிகாரத்திலும் மற்றும் நீங்கள் செய்யும் ஹோமம் மற்றும் இதர வழிபாடுகளிலும் முன்ஜென்ம பாவத்தை போக்குவதற்க்காக தான் செய்கிறார்கள். அதற்கு நீங்கள் கொஞ்சம் முன்ஜென்மத்தைப்பற்றி தெரிந்து இருந்தால் அதனை நீங்களே தீர்க்கமுடியும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன்.
வேலை பணம் என்று எப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இது இருக்கவேண்டும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன். ஒரு சிலர் விருப்பட்டும் இதனை ஆராய்வார்கள் அவர்களுக்காகவும் இதனை எழுதுகிறேன்.
முன்ஜென்மத்தை வைத்து பல சம்பங்கள் உங்களின் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அதனை எல்லாம் எழுதும்பொழுது இது அதற்காக தான் நடைபெற்றதா என்று நீங்கள் நினைத்தால் உங்களின் ஆத்மா ஒரு சந்தோஷம் அடையும் அதற்க்காகவும் எழுதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment