வணக்கம்!
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல முருகன் கோவிலில் விஷேசமாக இருக்கும். வைகாசி விசாகத்திற்க்கு முருகன் கோவிலில் திருவிழா நடந்தாலும் ஊருக்கு வெளியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு தான் அதி விஷேசமாக திருவிழா நடைபெறும்.
ஒவ்வொரு ஊருக்கும் காவல் தெய்வமாக இருப்பது அய்யனார். ஒரு ஊரேயே காக்கும் தெய்வமாக ஐயனார் கோவில் இருப்பதால் நமக்கு பல விதத்திலும் நன்மை செய்யக்கூடிய ஒரு தெய்வமாகவே இருக்கும்.
பழைய பதிவில் கூட சனிக்கிரகத்திற்க்கு பரிகாரமாக ஐய்யனார் வழிபாடு செய்யலாம் சொல்லிருக்கிறேன். உங்களுக்கு சனியின் தோஷம் இருந்தால் அய்யனார் வழிபாடு செய்யலாம். சனி தோஷம் குறையும்.
அய்யனார் வழிபாடு செய்வது என்பது ஒரு ராஜவழிபாடு செய்வது போல் ஒன்று. அய்யனார் குதிரை அல்லது யானையில் தான் அமர்ந்திருப்பார். அய்யனாருக்கு சந்தன காப்பு செய்வித்தல் போன்றவை ராஜவழிபாட்டை குறிக்கும்.
நான் பல ஊர்களுக்கு சென்று வருவதற்க்கு காரணமாக இந்த அய்யனார் வழிபாடும் முக்கியமானதாக இருக்கின்றது. அந்தந்த ஊர்களில் உள்ள ஐயனாரை வழிபட்டு வருவது உண்டு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment