வணக்கம்!
நேற்று முடிந்துவிட்டது. நாளை வரபோகின்றது. இன்று மட்டும் தான் நம் கையில் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இன்றைய நாள் மட்டுமே இருக்கின்றது. இதனை மட்டும் நாம் பயன்படுத்திக்கொண்டால் போதும் என்பது ஞானிகளின் வாக்கு.
ஞானிகள் சொல்லுவது சரி தான் ஆனால் நம்மை சரிசெய்ய இந்த கடந்த காலம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த பிறப்பு மட்டும் இல்லாமல் முந்தைய பிறப்பின் காரணமாகவே இந்த பிறப்பு எடுக்கிறோம் என்பது தான் உண்மை.
சோதிடத்தின் அடிப்படை முன்ஜென்மத்திற்க்கு தகுந்தவாறு இந்த ஜென்மம் அமையும் என்பது தான் அடிப்படை. ஒவ்வொரு ஜாதகமும் எழுதுவதற்க்கு முன்பு இந்த வாசகத்தை கண்டிப்பாக எழுதாமல் ஜாதகம் எழுதமாட்டார்கள்.
முன்ஜென்மத்தில் நம்முடைய உறவுகள் எப்படியே அதேபோல் தான் பெரும்பாலும் இந்த ஜென்மத்திலும் இருக்கின்றது. அனைத்தும் அப்படி இல்லை என்றாலும் ஒரளவு ஒட்டி இது வரும் என்பது மட்டும் உண்மை.
உங்களின் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். கொஞ்சம் அமைதியாக இதனை யோசித்து பார்த்தால் உங்களுக்கு இது தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment