Followers

Thursday, June 15, 2017

ஆன்மீகம் எதற்கு ?


வணக்கம்!
          வாழ்க்கையில் எதனை தேர்வு செய்யவேண்டும் என்பது முதலில் தீர்மானித்துவிடவேண்டும். தொழில் செய்ய போகின்றோமா அல்லது வேலை செய்ய போகின்றோமா என்பதை தேர்வு செய்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படவேண்டும்.

வேலைக்கு செல்லவேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டால் ஒரு நல்ல வேலையாக பார்த்து தேர்வு செய்துவிடவேண்டும். நல்ல வேலை என்றால் நல்ல சம்பளம் கிடைப்பது என்பது தான். நல்ல சம்பளம் கொடுத்தால் கண்டிப்பாக உங்களை நன்றாக வேலை வாங்குவார்கள்.

வேலைக்கு சென்றால் நாம் அடுத்தவர்களின் அடிமை தான். அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி அது அடிமை தான் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு வேலை செய்யதால் வேலையில் ஏற்படும் அழுத்தும் உங்களை பாதிக்காது. உங்களுக்கு மேல் உள்ளவர்கள் உங்களை எப்படி எல்லாம் வேலை வாங்கவேண்டுமாே அப்படி எல்லாம் வேலை வாங்கி தான் தீருவார்கள்.

வேலைக்கு சென்ற பிறகு எனக்கு வேலை கஷ்டமாக இருக்கின்றது என்பதை சொல்லகூடாது. வேலை என்றால் கண்டிப்பாக அப்படி தான் இருக்கும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த வேலைக்கு சென்றுவிடவேண்டும். அங்கேயும் பிரச்சினை காத்துக்கொண்டு தான் இருக்கும்.

வேலைக்கு செல்லும்பொழுது ஒன்றை கணித்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை முழுவதும் வேலை செய்தால் இவ்வளவு தான் பணம் கிடைக்கும் என்பதை தீர்மானித்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. ஏன் என்றால் பல பேர் எனக்கு சம்பளத்தை உயர்த்தவில்லை அதற்கு என்ன செய்வது என்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள். வாழ்வு முழுவதும் வேலை செய்தால் இவ்வளவு தான் நம்மால் சம்பாதிக்கமுடியும் என்பது உங்களுக்கு எளிதில் கணித்துவிடலாம்.

தொழில் செய்ய போகின்றீர்களாக என்றால் அதனை முடிவு எடுத்துவிட்டு நான் இதில் தான் இருக்கபோகின்றேன். இது தான் என் வாழ்வு என்று இருக்கவேண்டும். அதே போல் உழைக்கவேண்டும். கண்டிப்பாக இதிலும் பிரச்சினை இருக்கதான் செய்யும். அதனையும் சமாளித்து தான் மேலே வரவேண்டும்.

தொழிலில் ஏற்ற தாழ்வுகள்  இருக்க தான் செய்யும். அதனால் அது பிரச்சினை என்று அழுதுக்கொண்டு இருக்ககூடாது. அதனையும் சமாளித்து தான் ஆகவேண்டும். 

மாற்றம் இந்த உலகத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கும். வேலையிலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி உங்களை மாற்றிக்கொண்டு தான் செல்லவேண்டும். தொழிலில் ஏற்றதாழ்வுகளை நீங்கள் சந்தித்து தான் தீரவேண்டும்.

அம்பானியாக இருந்தால் கூட பல தொழில்கள் அவர்களுக்கும் நஷ்டத்தை தந்து தான் இருக்கின்றது. அதனால் அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை தன்னை நிலை நிறுத்த பல வழிகளிலும் கையாண்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.

ஆன்மீகம் எதற்கு ?

இரண்டு பேரையும் பிரச்சினை இல்லாமல் செல்வதற்க்கு வழி வகுக்குமா என்று கேள்வி கேட்கலாம். பிரச்சினை வரும் ஆனால் அதனை சமாளிக்கும் சக்தியை ஆன்மீகம் கொடுக்கும். அது மட்டும் தான் ஆன்மீகத்தின் வேலை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: