Followers

Sunday, June 25, 2017

செல்போன்


வணக்கம்!
          நம்முடைய மரியாதைக்கு நாம் தான் காரணமாக இருப்போம். நமக்கு கிடைக்கும் மரியாதை என்பது நாமே உருவாக்கிக்கொள்வது தான். இதற்கு தான் ஒழுங்கான வழியில் சென்றுக்கொண்டு இருப்பது. பலவித இடர்பாடுகள் வந்தாலும் தடம் மாறாமல் ஒவ்வொருவரும் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் இதில் இருந்து விலகி இருக்கலாம். 

செல்போன் தேவை என்பது இன்றைய காலத்தில் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த செல்போனில் கூட மரியாதை என்பது இருக்கின்றது. நம்மை யார் என்பதை காட்டிக்கொடுக்கும் ஒரு சாதனமாக கூட பல விதத்திலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எப்படி என்கிறீர்களா? நமக்கு வரும் அழைப்பை ஏற்றுக்கொள்வது யாராவது ஒருவர் போன் அடித்தால் அதனை உதாசினப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வது என்பது பிறர்க்கு நாம் கொடுக்கும் மரியாமை அதனால் அவர்களும் நம்மை மதிப்பார்கள். 

அவசரவேலை அல்லது வண்டியை செலுத்திக்கொண்டு இருக்கும்பொழுது போனை எடுக்கவில்லை என்றால் அதில் உண்மை இருக்கின்றது. சும்மா அமர்ந்து இருக்கும்பொழுது அதனை எடுக்காமல் இருந்தால் தான் நமது மரியாதை போய்விடும்.

செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டே இருப்பது அது எல்லாவற்றையும் விட படுமோசம். அதாவது நம்மை நாமே அசிங்கப்படுத்திக்கொள்கிறோம் என்று அர்த்தம். எண்ணை மாற்றிவிட்டு அனைவரிடமும் நாம் தகவல் கொடுத்துவிட்டோம் என்று நினைப்போம் ஆனால் அதனை கவனிக்காமல் விட்டு இருப்பார்கள்.

செல்போன் கம்பெனிக்காரர்கள் ஏதாவது இலவசம் என்று கொடுத்தால் அதற்காக நம்மிடம் இருக்கும் பழைய எண்ணை  மாற்றிக்கொள்ளகூடாது. ஒரு தொழிலின் வெற்றி என்பது உங்களை தொடர்புக்கொள்ளும் விதத்தில் தான் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள்.

நான் அம்மனிடம் கூட எனக்காக வேண்டிக்கொள்வது என்னை தொடர்புக்கொள்ளும் நபர்களிடம் எந்த நேரமும் பேசக்கூடிய வாய்ப்பை கொடுத்துக்கொண்டே இரு என்பது மட்டுமே. இதுவரை இதனை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது.  எதிர்காலத்திலும் அம்மன் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: