Followers

Thursday, June 1, 2017

கர்மா


வணக்கம்!
          நிறைய நேரத்தில் நமது கர்மாவை எதிர்நோக்காமல் போன காரணத்தால் நமது வாழ்வையும் வீணடித்து பிறர் வாழ்வையும் வீணடித்துவிடுகிறோம்.

நமது வாழ்வை வீணடித்துக்கொள்வதை நாம் ஏற்கிறோம் அது என்ன பிறர் வாழ்வையும் வீணடிக்கிறோம் என்று கேட்கலாம். நம்மை நம்பிருக்கும் குடும்பத்தை நமது நாட்டையும் வீணடிக்கிறோம். உங்களின் கர்மாவை எதிர்நோக்காமல் சினிமாவை பார்க்கின்றீர்கள். சினிமாவை அப்படி உங்களின் மனதில் ஏற்றி அதனால் இந்த சமுதாயத்திற்க்கு தீங்கு விளைக்கிறீர்கள்.

சினிமா என்பது ஒரு நாடகம் மாதிரி தான். நாடகத்தில் நடிக்கும் கதாநாயகனை கொண்டு வந்து உங்களை ஆளவும் வைக்க உங்களின் மனது தயாராகிறது அல்லவா. அதனால் தான் நாட்டையும் கெடுகின்றீர்கள் என்று சொன்னேன்.

உங்களின் மனது ஒரு மென்மையானது. அதனுள் சினிமாவை இறக்கினால் அது அந்த சினிமாவிற்க்கு தகுந்தமாதிரி மாறஆரம்பித்துவிடுகின்றது. ஒரு கதைக்கு நடித்த கதாநாயகனை உங்களின் வாழ்வையும் மாற்றுவான் என்று நம்பி அவனை ஆளவைத்துவிடுகிறது.

சினிமா மோகம் போனால் தற்பொழுது நெட் யூகம். அதில் உட்கார்ந்து ஏதோ செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். உங்களின் உண்மையான கர்மாவை நீங்கள் எதிர்நோக்காமலேயே தட்டிகழித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.

உண்மையான கர்மாவை எதிர்நோக்கவேண்டும் என்றால் தேவையில்லாம் நெட்டை பயன்படுத்தகூடாது. சும்மா ஒரு நாள் உட்கார்ந்துக்கொண்டு எதையும் தொடாமல் உங்களோடு மட்டும் இருந்து பாருங்கள். அப்பொழுது தெரியும் உண்மையான கர்மா என்றால் என்ன என்று புரியும். சும்மா அடுக்கு அடுக்காக வந்து உங்களை தாக்க ஆரம்பிக்கும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள கர்மாவை அனைத்தையும் தூக்கிவிடலாம். என்ன உங்களை அப்படி சும்மா உட்காரவிடாது. இன்றைய காலத்தில் ஆன்மீகம் என்றால் என்ன தெரியுமா. ஒரு நாளைந்து ஆன்மீக குருப்பில் தன் ஐடியை இணைத்துக்கொள்வது. உலகத்தில் உள்ள அனைத்து குருப்புக்களுக்கும் கமெண்ட் போடுவது அத்தோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கின்றீர்கள்.

உண்மையான ஆன்மீகம் அதுவல்ல. உங்களின் அனைத்து கர்மாவையும் எதிர்நோக்கிக்கொண்டு உங்களோடு வாழ்வது தான் ஆன்மீகம். அப்பொழுது தான் நீங்கள் கோவிலுக்கு மற்றும் பரிகாரம் செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: