Followers

Thursday, June 8, 2017

குரு



வணக்கம்!
          கடந்த மாதம் ராகுவா குருவா என்ற ஒரு பதிவை தந்திருந்தேன். இதில் குருவை பின்பற்றினால் உங்களுக்கு நல்லது. நேர்மையான வழியில் அனைத்தையும் பின்பற்றி சென்றுவிடலாம்.

குரு என்றால் குரு கிரகம் சொல்லும் ஒரு குருவை நாம் தேர்ந்தெடுத்து நாம் சென்றால் போதும். ஒரு குருவை தேர்ந்தெடுத்து பின்பற்றினால் முதலில் நமது பணத்தேவையே தீர்த்துவிடுவார். பணப்பிரச்சினை தீர்ந்தால் போதுமே இருக்கின்ற அனைத்து பிரச்சினையும் தீர்ந்த மாதிரி ஆகிவிடும் அல்லவா.

ஒரு சிலர் பணப்பிரச்சினைக்கு பிறகு அவர்களுக்கு ஒரு வீடு அமைந்துவிடும். பணம் வீடு இருந்துவிட்டாலே போதும் நீங்கள் கொஞ்சம் பிரியாகிவிடுவீர்கள் அல்லவா. இதனை குரு கொடுத்துவிடுவார். அவரின் அருளால் உங்களுக்கு கிடைத்துவிடும்.

நீங்கள் அமைதியாகிவிட்டால் நீங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு என்ன தேவை என்று பார்த்து சென்றுக்கொண்டு இருப்பீர்கள். பணப்பிரச்சினையில் மாட்டினால் உங்களால் எதுவும் செய்யமுடியாது.

இந்த காலத்தில் இருக்கின்ற சாமியார்கள் எல்லாம் இதனை மிகச்சரியாக செய்வார்கள். ஒவ்வொரு சாமியார்களிடம் கூட்டம் இருக்கின்றது என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை. அவர்கள் குருவாக இருந்து உங்களுக்கு நிறைய கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு பணப்பிரச்சினை இருந்தால் ஒரு குருவை ஏற்றுக்கொண்டு அவர்களின் வழியில் செல்வது நல்லது. உங்களுக்குள்ள பிரச்சினை தீர்ந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: