வணக்கம்!
நமக்கு ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு இருக்கின்றது என்று நண்பர்கள் கேட்பார்கள். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கும்.
மாற்றம் என்பது இந்த உலகத்தில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் கிரக சுழற்சி இருப்பதால் தான் நடக்கிறது. ஒவ்வொரு கிரகங்களும் சுற்றி வந்துக்கொண்டே இருப்பதால் நல்லது கெட்டது மாறி மாறி வந்துக்கொண்டு தான் இருக்கும்.
நாம் செய்யும் பூஜைகள் நம்மை காக்கவில்லை என்று சொல்லுபவர்களும் உண்டு. அப்படி எல்லாம் இல்லை. ஒரு பூஜை உங்களை காக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நீங்கள் மறுபடியும் அந்த பூஜையை செய்யவேண்டும்.
யார் செய்தாலும் பூஜையின் பலன் கிடைக்கும். கிரக சுழற்சி காரணமாக கொஞ்சநாளில் அது நம்மை விட்டு சென்றுவிடுகிறது. அதன் பிறகு நாம் அடுத்த பூஜையை செய்யவேண்டியிருக்கும். அப்பொழுது மறுபடியும் உங்களுக்கு நிலைமை சரியாகும்.
என்ன தொடர்ந்து பூஜையை செய்துக்கொண்டே இருக்கமுடியுமா எ்னறு கேட்கலாம். என்ன செய்வது நம்மை நிலைநிறுத்த நிறைய வேலை கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டியிருக்கிறது கண்டிப்பாக செய்யவேண்டும்.
மாதம் ஒரு முறை செய்வது போல் செய்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னால் அப்படி செய்யமுடியவில்லை என்பவர்கள் மாதந்தோறும் நடைபெறும் அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். அதோடு பரிகார பூஜையிலும் கலந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment