Followers

Thursday, June 15, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
          ஒருவரின் முன்ஜென்மத்தை அறிய அவர்களின் ஐந்தாவது வீட்டை பார்த்தால் தெரியும் என்பார்கள். ஐந்தாவது வீட்டை அதற்க்கு தான் பூர்வபுண்ணியம் என்று வைத்திருக்கிறார்கள். முன்ஜென்மத்தில் நல்லத கெட்டது என்று அனைத்தையும் அதன் வழியாக கொடுக்க செய்கிறது.

ஐந்தாவது வீட்டில் செவ்வாய் சம்பந்தப்பட்டால் அவர் முன்ஜென்மத்தில் படை வீரர்களாக அல்லது படை தலைவனாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறியலாம். ஐந்தாவது வீட்டிற்க்கு செவ்வாய் கிரகத்தின் பார்வை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதுவும் போர் சம்பந்தப்பட்டவர்களாக தான் முன்ஜென்மத்தில் இருந்திருப்பார்கள்.

ஐந்தாவது வீட்டில் சூரியன் சம்பந்தப்பட்டால் அவர்கள் அரசபரம்பரையில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அரசர்களாகவும் இருந்திருப்பார்கள். ஒரு சிலர் அரசாங்கத்தில் நல்ல நிலையில் பணிபுரிந்துக்கொண்டும் இருந்திருப்பார்கள்.

ஒரு சில கருத்துக்கள் உங்களுக்கு புரியும் படி இருக்கவேண்டும் என்பதற்க்காக சோதிடத்தை வைத்து உங்களுக்கு மேலே சொன்ன தகவல்களை தந்தேன். நம்முடைய குலதெய்வமும் உங்களின் ஐந்தாவது வீட்டை வைத்து தான் நிர்ணயம் செய்கிறோம் அல்லவா.

ஒருவரின் குலதெய்வம் முன்ஜென்மத்திலும் அவர்களுக்கு குலதெய்வமாக இருந்திருக்கவும் செய்கிறது. எனக்கு அம்மன் முன்ஜென்மத்தில் குலதெய்வமாக இருந்திருந்தால் இந்த ஜென்மத்திலும் அம்மன் தான் குலதெய்வமாக வருகின்றது.

ஒரு சிலருக்கு குலதெய்வம் மாறுப்பட்டு வரவும் செய்கிறது. ஒரு சில பிறப்பில் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக இப்படி மாறவும் செய்யலாம். அதாவது அவர் அவர்களின் வினைப்பயன்படி இது நடக்கலாம்.

முன்ஜென்மத்தைப்பற்றி நான் சொல்லுவது ஒரு சின்ன கருத்தாக உங்களுக்கு இருக்கலாம். இதனை உங்களின் மனதில் போட்டு அதனை அலசி பார்க்கும்பொழுது தான் உங்களுக்கு என்ன என்பது தெரியவரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: