வணக்கம்!
பல நண்பர்களிடம் சொல்லும் விசயம் ஒன்று. ஒன்றை செய்தால் அதனை விடாமல் தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள் என்பது தான் அது. எந்த வழிபாடு செய்தாலும் அதனை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள். அந்த வழிபாடு உங்களை மேலே கொண்டு செல்லும் என்பது மட்டும் உண்மையான ஒன்று.
பச்சைப்பரப்புதல் ஒன்றை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அதனை பல நண்பர்கள் செய்து வருகின்றனர். அதோடு நம்ம வேளை அதனை சொல்லிக்கொண்டே இருப்பது மட்டுமே.
கிரகங்களை கண்டு நம்ம ஆட்கள் நிறைய பயப்படுவது உண்டு. தோஷத்தால் தான் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த தோஷத்தை போக்குவது எப்படி என்று புலம்புவதும் உண்டு. இதனை போக்க நீங்கள் தொடர்ச்சியாக பச்சைப்பரப்புதல் செய்து வந்தால் போதும்.
பச்சைப்பரப்புதலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். நிறைய இருக்கின்றது அதனை எல்லாம் போக போக உங்களுக்கு தெரியும். அதனை அனுபவபூர்வமாக செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு இது புரியும்.
ஜாதகத்தில் உள்ள தோஷம் தான் என்னை பாடாய் படுத்துகிறது என்று புலம்பிக்கொண்டு இல்லாமல் ஏதோ ஒரு வழிபாடு செய்யுங்கள் அல்லது பச்சைப்பரப்புதலை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment