Followers

Thursday, June 22, 2017

பூஜையறையில் யார் பூஜை செய்யவேண்டும்?


வணக்கம்!
          ஒவ்வொரு வீட்டிலும் பூஜையறையில் விளக்கை ஏற்றுவது அந்த வீட்டு பெண்களாக இருக்கவேண்டும். பூஜையறையை பொறுத்தவரை ஆண்கள் அதிகம் பயன்படுத்தகூடாது என்பது ஒரு கருத்து.

பெண்கள் விளக்கை ஏற்றி வைத்து அவர்கள் சாமி கும்பிட்டால் அது அந்த வீட்டிற்க்கு சுபிட்ஷத்தை கொண்டு வரும். ஆண்கள் இதனை செய்தால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் கொஞ்ச நாளில் விளங்காமல் சென்றுவிடுவார்கள். பெண்கள் நோய்வாய்ப்படுவதற்க்கும் வாய்ப்பு உண்டு.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருப்பார்கள் என்பது இதனை தான் முன்னோர்கள் சொல்லிருப்பார்கள். பெண்கள் பூஜையறையை பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த வீட்டின் ஆண்மகன் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடுவான். பெண்களுக்கு அந்தளவு சக்தி இருக்கின்றது.

பல வீடுகளில் ஆண்கள் தான் பூஜையறை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர். அது அவர் அவர்கள் வாங்கி வந்த வரம் என்று தான் சொல்லவேண்டும் வேறு என்ன என்று சொல்லுவது.

பொதுவாக பெண்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டால் அவரின் கணவர் சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் நல்ல செல்வாக்கோடு இருப்பார்கள். பல வீட்டில் ஆண்கள் சாமி எல்லாம் கும்பிடாமல் நாத்திகராக இருப்பார்கள் ஆனால் அந்த வீட்டில் உள்ள பெண் சாமி நன்றாக சாமி கும்பிடுவார். ஆண் பெரியளவில் இருப்பார்.

ஜாதககதம்பத்தில் உள்ள பல வீடுகளில் பெண்கள் நல்ல நிலையில் ஆன்மீகத்தில் இருக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியும். இவர்களால் அவர்களின் கணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது அனுபவத்தில் நமது வாடிக்கையாளர்களை வைத்தே நான் பார்த்து இருக்கிறேன்.

இதுவரை சும்மா இருந்திருந்தாலும் இனிமேலாவது பெண்களை பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய சொல்லுங்கள். நீங்கள் எளிதாக அனைத்திலும் சாதித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: