வணக்கம்!
அனைவருக்கும் மாந்தி பரிகாரம் செய்து முடித்துவிட்டேன். பரிகாரம் செய்த காரணத்தால் நேற்று பதிவை தரமுடியவில்லை. நண்பர் ஒருவர் முன்ஜென்மம் பற்றி ஒரு கேள்வி கேட்டுருந்தார். முதன் முதலில் ஒரு மனிதன் பிறந்து இருப்பான் அல்லவா. அது எந்த பாவத்தால் அந்த ஜென்மத்தை எடுத்து இருப்பான் என்று கேட்டார்.
இப்படிப்பட்ட கேள்வி எல்லாம் மனிதன் கேட்பதால் தான் மழை பெய்வதில்லை என்று நினைக்கிறேன். பரவாயில்லை எந்த கேள்விக்கும் நாம் விடை கொடுக்கவேண்டும் அல்லவா. கொஞ்சம் அதனையும் பார்த்துவிடலாம்.
பாவம் செய்வதால் தான் மனிதன் ஜென்மம் எடுக்கிறான் என்பது எல்லாம் நான் சொல்லவில்லை. நன்மை செய்ததால் ஒரு சில நல்ல விசயத்தை செய்யவும் மனிதன் பிறப்பு எடுக்கலாம் அல்லவா. மனிதப்பிறப்பு பாவத்ததால் மட்டும் வருவதில்லை நன்மையாளும் மனிதன் பிறக்கிறான்.
ஒவ்வொரு பரிமாணத்தையும் எடுத்து வரும்பொழுது மனிதப்பிறப்பு வந்தும் அது தன்னுடைய மூலத்தை அடையலாம். இதனைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
நிறைய கருத்துக்களை நாம் சொல்லபோகிறோம். அதனை எல்லாம் பார்த்துவிட்டு அதற்க்கு தீர்வையும் சொல்லபோகிறோம். சும்மா கதையாக இல்லாமல் முடிந்தளவுக்கு நமக்கு அதனால் என்ன பயன் என்பதையும் சொல்லிவிட்டால் உங்களுக்கு பயனாக அது இருக்கும். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment