Followers

Friday, June 2, 2017

பரிகார பாதுகாப்பு


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் பிரச்சினையை தரும் அந்த கிரகத்தை கண்டுபிடிப்பதில் தான் நமது திறமையே இருக்கும். இந்த கிரகம் தான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துக்கொண்டு இருப்போம். கடைசியில் அந்த கிரகமாக இருக்காது. ஏதோ ஒரு கிரகம் தாக்கிக்கொண்டு இருக்கும்.

சம்பந்தப்பட்ட கிரகத்தை கண்டுபிடித்து அதற்கு பரிகாரம் செய்தால் அது பெரியளவில் நமக்கு பாதிப்பை தரும். அதனையும் நாம் சரிசெய்துக்கொண்டு அதன் பிறகு தான் பரிகாரத்தையே செய்யவேண்டும்.

தற்பொழுது உங்களுக்கு மாந்தி பரிகாரம் செய்கிறேன். இந்த மாந்தி பரிகாரத்திற்க்கு கூட உங்களை தானம் செய்ய சொன்னதே இப்படிப்பட்ட அடி எதுவும் உங்களுக்கு வந்துவிடகூடாது. அதே நேரத்தில் அந்த பரிகாரத்தால் நன்மை நடக்கவேண்டும் என்பதற்க்காக தான் செய்ய சொல்லிருந்தேன்.

என்னிடம் வந்தாலும் சரி பிறரிடம் சென்றாலும் சரி உங்களின் குடும்பத்திற்க்கு அந்த பாதிப்பை வராமல் பாதுகாக்க தானத்தை செய்துவிட்டு அதன் பிறகு உங்களின் பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள்.

நிறைய பேர் ஜாதக பலனை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மாந்தி பரிகாரம் முடிந்த பிறகு உங்களுக்கு பலனை கொடுக்க ஆரம்பிக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: