Followers

Sunday, June 25, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
         சூரியன் ஐந்தில் நின்றால் முன்ஜென்மத்தில் நீங்கள் தந்தை வழி இடத்தில் நல்லதும் கெட்டதுமாக இருந்திருப்பீர்கள். என்ன இரண்டையும் சொல்லுகிறேன் என்று நினைக்கவேண்டாம் இந்த ஜென்மத்தின் பலனையும் கொஞ்சம் கொடுக்கிறேன் அதனை வைத்து நீங்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.

முன்ஜென்மத்தில் அரசாங்கவழியில் வேலை செய்பவர்களாக இருந்திருப்பீர்கள். பணம் புழங்கும் இடத்தில் முன்ஜென்மத்தில் வேலைக்கு இருந்திருக்கலாம். 

தற்பொழுது நீங்கள்
                    தந்தை வழி உறவு அரசாங்கவழி நல்லது மக்கள் செல்வம் நல்ல பணபுழக்கம் இருந்தால் முன்ஜென்மத்தில் நல்லது என்ற பக்கத்தில் நீங்கள் இருந்திருப்பீர்கள்.

தந்தை வழியில் சிக்கல், கடுமையான வறுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை, பணபுழக்கம் இல்லாமை, காதல் தோல்வி இப்படி இருந்தால் முன்ஜென்மத்தில் பாவத்தில் இருந்திருக்கின்றீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் தந்தைவழியில் உள்ளவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை கொடுப்பவர்களாக தற்பொழுது இருப்பார்கள். நீங்கள் எது செய்தாலும் உங்களுக்கு ஒரு செக் வைக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லதுங்க. ஏன் என்றால் இவர்கள் எல்லாம் உங்களின் முன்ஜென்மத்து விரோதிகள். இவர்களிடம் மல்லுக்கு நிற்காமல் இருப்பதே சிறப்பு.

சூரியன் நல்லது செய்கிற நிலையில் இருந்தால் தந்தை வழியில் உங்களுக்கு உதவி செய்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களின் வாழ்க்கை சந்தோஷமாக வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: