Followers

Tuesday, June 6, 2017

செவ்வாய் தரும் கோபம்


வணக்கம்! 
          ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு வருவது இயற்கை. சண்டை என்பது எந்த நேரமும் இருந்துக்கொண்டே இருந்தால் அது உங்களுக்கு தீராத தலைவலியாக மாறிவிடும். 

ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவு இருந்தால் அந்த குடும்பத்தில் தெய்வீகத்தன்மை என்பது இல்லாமலே போய்விடும். தெய்வம் அந்த வீட்டிற்க்கு வராமல் இருந்துவிடும். பொதுவாக ஒரு குடும்பத்தில் அதிக சண்டை நடப்பதற்க்கு காரணம் செவ்வாய் கிரகம் அந்த குடும்பத்திற்க்கு தீங்கு விளைவிக்கிறது என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

செவ்வாய் தன்னுடைய சுழற்சியில் கோச்சாரரீதியாக செல்லும்பொழுது பகை வீட்டில் அல்லது தீயகிரகத்தோடு சனியோடு சேரும்பொழுது அது சண்டை சச்சரவுகளை கொடுக்கிறது. செவ்வாய் கிரகம் போர் தன்மையோடு இருப்பதால் தான் இது நடக்கிறது.

பொறுமையை அதிகம் கடைபிடித்தாலும் ஒரு சில நேரத்தில் இந்த செவ்வாய் கிரகம் நம்ம குடும்பத்தில் உள்ள அடுத்தவர்களிடம் கோபத்தை கிளப்பிவிட்டு நம்மை படாதப்பாடுபடுத்திவிடுவதும் உண்டு. 

செவ்வாய் கிரகத்திற்க்கு நாம் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்தாலும் வருடம் ஒரு முறை செவ்வாய் காரத்துவம் உடைய கோவிலுக்கு சென்று வரவேண்டும். அதோடு நம்முடைய குலதெய்வத்தையும் நன்றாக வழிபட்டு வந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.

ஒரு சில இடத்தில் ஊமையாக இருந்துவிடுவது நல்லது. எது நடந்தாலும் நீங்கள் ஊமையாக இருந்துவிட்டால் பெரும்பாலும் சண்டை சச்சரவை குறைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: