வணக்கம்!
ஒருவர் தொழிலில் தோல்வி
அடைய என்ன காரணம் என்று
நண்பர் கேட்டார்.
தொழிலை
தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த
தவறு தான் முதல் காரணமாக
இருக்கமுடியும். தொழிலை நடத்துவதற்க்கு தேவையான
நிதியை முதலில் தயார் செய்துவிட்டு
தொழிலை தொடங்குவதில்லை. இது முதல் காரணமாக
இருக்கின்றது.
தொழிலை
நடத்த தெரியாமல் யாரோ சொன்னார்கள் என்று
தொழிலை ஆசைப்பட்டு தொடங்கினாலும் மாட்டிக்கொள்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த
தொழில் இந்த காலத்திற்க்கு உகந்ததாக
இருக்கின்றதா என்பதையும் அவ்வப்பொழுது பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. மாறிக்கொண்டு இருக்கும்
உலகத்திற்க்கு ஏற்ப அதனை நாம்
மாற்றிக்கொண்டால் நல்லது.
சோதிடம்
என்பது அடுத்த படி தான்.
நீங்கள் செய்கின்ற விசயம் எல்லாம் செய்துவிட்டு
அதன் பிறகு இந்த இயற்கை
நமக்கு உதவுமா என்பதை அறிய
சோதிடத்தை நாடலாம். நாம் செய்கின்ற ஒவ்வொரு
விசயம் சோதிடத்திற்க்குள் தான் வருகின்றது. நாம்
செய்கின்ற விசயத்தை சரியாக செய்து விட்டு
அதன்பிறகு சோதிடத்தை பார்த்துவிட்டால் எளிது.
சோதிடத்தில்
ஏற்படும் கிரக நிலை மாற்றம்
ஒவ்வொரு தொழிலையும் மாற்றிக்கொண்டே இருக்கும். இன்று ஒரு தொழில்
நன்றாக இருக்கின்றது என்றால் கொஞ்சநாளில் அல்லது
ஒரு சில வருடத்தில் அது
போய்விடும் அதன்பிறகு அடுத்ததொழில் வரும். அதற்கு தகுந்தார்
போல் நாம் தொழிலை செய்துக்கொண்டு
வந்தால் கண்டிப்பாக தொழில் தோல்வியை தழுவாது.
ஆன்மீக
வழியில் தொழிலை ஒரளவுக்கு சரியப்படுத்தலாம்
அதுவும் ஒரு எல்லை இருக்கின்றது.
அதனை தாண்டி வேலை செய்யமுடியாது
என்பது தான் உண்மை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment