Followers

Thursday, June 29, 2017

பூர்வபுண்ணியம் பாெதுபரிகாரம்


ணக்கம்!
          இதுவரை கிரகங்களுக்கு மட்டும் பரிகாரம் செய்து வந்த நாம் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக உங்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் செய்வோம்.  உங்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு இந்த முறை பொதுபரிகாரம் செய்யப்படும்.

இதுவரை நாம் முன்ஜென்மத்தை பற்றி பார்த்து வந்தோம். ஒரு சில கருத்துக்களை மட்டும் அதில் சொல்லிருக்கிறேன். பல கருத்துக்களை ஜாதககதம்பத்தில் பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். பொதுவாக பூர்வபுண்ணியத்திற்க்கு என்று யாரும் இந்தளவுக்கு சொல்லுவார்களாக என்பது தெரியாது. அந்தளவுக்கு அதில் கருத்துக்களை சொல்லிருக்கிறேன். அதனை படித்து பாருங்கள்.

இந்த முறை இதனை அறிவித்த காரணம் நமது நண்பர்கள் அனைவரும் வித்தியாசமான ஒரு பரிகாரத்தை கொடுங்கள் என்று சொன்ன காரணத்தால் மட்டுமே இதனை அறிவித்து இருக்கிறேன். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்க்கு இதனை அறிவித்தேன்.

பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் என்பது கொஞ்சம் சவாலான விசயமாக தான் இருக்கும். எப்படிப்பட்ட சவாலான விசயத்தையும் அம்மன் துணைக்கொண்டு செய்துவிடலாம் என்று இந்த பரிகாரத்தை அறிவித்து இருக்கிறேன்.

இதற்க நீங்கள் செய்யவேண்டியது உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைத்துவிட்டு உங்களால் முடிந்த பணத்தை அனுப்பலாம். உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களால் முடிந்தால் ஒரு அபிஷேகம் செய்யலாம் அல்லது அதற்கு ஒரு சின்ன காணிக்கையாவது செலுத்திவிட்டு சாமி கும்பிட்டு வாருங்கள். 

பூர்வபுண்ணியத்தில் பித்ருதோஷம் என்ற ஒன்று வரும். பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் மட்டும் பரிகாரம் செய்யவேண்டும் என்பதால் அதற்கு மட்டும் இந்த பரிகாரத்தில் வழி செய்யபடமாட்டாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி அனைத்தும் நடைபெறும் விதத்தில் பரிகாரம் செய்யப்படும்.

இன்று முதல் ஜாதகத்தை அனுப்பலாம். அம்மன் பூஜை முடிந்தவுடன் பரிகாரம் ஆரம்பம் ஆகும். அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளுங்கள். அம்மன் அருளால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: