வணக்கம்!
ஒரு நண்பர் கேள்வி ஒன்றை கேட்டார். நீங்கள் செய்யும் பரிகார வேலையில் எந்த வேலையில் உங்களுக்கு அதிக கர்மா வந்து சேரும் என்றார்.
பல நண்பர்கள் சோதிடதொழில் செய்து பரிகாரமும் செய்து வருவீர்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த பதில் ஒரு நன்மை செய்யும் என்பதற்க்காக இதனை தருகிறேன். ஒரு ஜாதகர் வந்து எனக்கு நோய் வந்து இருக்கின்றது இதனை குணப்படுத்த பரிகாரம் செய்யுங்கள் என்று சொன்னால் அதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு அதிக கர்மா வரும்.
ஒரு ஜாதகருக்கு ஒரு நோய் வருகின்றது என்றால் அது அவர்களின் முன்ஜென்மத்தில் உள்ள பிரச்சினையால் தான் நோய் வரும். இப்படிப்பட்ட நோயை நீங்கள் பரிகாரம் செய்து நீங்கள் காப்பாற்ற நினைத்தால் உங்களுக்கு அதிக கர்மா வந்துடைந்துவிடும்.
நோய்க்கு மட்டும் பரிகார செலவு அதிகமாக கேட்பார்கள். அதற்க்கு காரணம் பல வருடங்கள் சேமித்து வந்த புண்ணியம் எல்லாம் அதிலேயே போய்விடும் அதிக சக்தி செலவாகிவிடும் என்பதால் ஒரு பெரிய தொகையை கேட்பார்கள்.
ஒருவருக்கு நோய் வந்தால் அதிகப்பட்சம் நான் அம்மனிடம் ஒரு வேண்டுதல் வைப்பதோடு சரி. அவர்களிடம் பல கோவிலுக்கு சென்று வாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிடுவதும் உண்டு.
ஒருவருக்கு ஒரு நோய் வந்து அவர்களுக்கு நல்ல மருத்துவமனை நீங்கள் பரிந்துரை செய்யலாம் அதனால் உங்களுக்கு புண்ணியம் சேரும் ஆனால் பரிகாரத்தை அதிகம் பரிந்துரை செய்யகூடாது. நோய்க்கு பரிகாரம் செய்தால் தான் அதிக கர்மா உங்களை பிடிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment