Followers

Thursday, June 8, 2017

நல்ல உணவு


வணக்கம்!
          நமது வாடிக்கையாளர்களின் உணவு பழக்கத்தில் நான் அதிகம் தலையீடு செய்வதில்லை. எதனை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று இருந்துவிடுவேன். அதனை சாப்பிடு இதனை தான் சாப்பிடவேண்டும் என்பதில் என்னுடைய தலையீடு இருக்காது.

முடிந்தவரை நல்ல சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அதே நேரத்தில் நன்றாக சாப்பிடுங்கள் என்றும் சொல்லுவது உண்டு. இதனை மறுபடியும் சொல்லுவதற்க்கு காரணம் இருக்கின்றது.

நன்றாக சாப்பிட்டால் உங்களுக்கு கிரகங்களின் பாதிப்பு அதிகம் இருக்காது என்பதற்க்காக சொல்லுவேன். என்னடா புதிய கதையாக இருக்கின்றது உங்களின் மனம் நினைக்கும். உண்மையான விசயம் தான் இது. நல்ல சத்துள்ள உணவுகளை நீங்கள் உட்க்கொண்டால் உங்களுக்கு கிரகங்களின் பாதிப்பு இருக்காது. 

பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். எப்படிப்பட்ட வறுமை வந்தாலும் சரி உணவு விசயத்தில் நீங்கள் கவனமாக இருந்தால் போதும் நல்ல உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும் என்று சொல்லிருக்கிறேன்.

நல்ல சத்துள்ள உணவுகளை உட்க்கொண்டுவிட்டால் உங்களுக்கு செய்யும் பரிகாரம் எளிதில் வேலை செய்ய ஆரம்பிக்கும். சத்துள்ள உணவு இல்லை என்றால் உங்களுக்கு செய்யும் பரிகாரம் கூட வேலை செய்யாது அதனால் நல்ல உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்.

வருகின்ற வாரத்தில் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: