வணக்கம்!
முன்ஜென்மத்தைப்பற்றி கொஞ்சம் நாம் பார்க்கலாம். இதற்கு முன்னோட்டமாக ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். நீங்கள் முற்பிறவியை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக ஒரு சிறிய முயற்சியாவது எடுத்துக்கொண்டு இருப்பீர்கள். அதிகப்பட்சம் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.
முற்பிறவி என்பது இல்லை என்றால் ஜாதகம் என்பதே கிடையாது என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் நீங்கள் முற்பிறவியில் ஆன்மீக தேடுதலோடு தான் இருந்து இருக்கவேண்டும். அந்த ஆன்மீக தேடுதல் இல்லை என்றால் நீங்கள் இப்படிப்பட்ட தெய்வீகசோதிடகலை எல்லாம் படித்து இருக்கமுடியாது.
நீங்கள் முற்பிறவியில் ஒரு அரசனுக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கி இருக்கவேண்டும் அல்லது ஆன்மீகத்தை நன்கு புரிந்துக்கொண்ட அரசனாக அல்லது மந்திரியாக இருந்து இருக்கவேண்டும்.
நான் சினிமா படத்தை அல்லது ஏதோ புத்தகத்தை படித்துவிட்டு சொல்லவில்லை. ஆன்மீகத்தை ஒருத்தன் நாடுகிறான் என்றால் அவன் பிறப்பு கண்டிப்பாக ஒரு சராசரி பிறப்பாக முற்பிறவியில் இருந்து இருக்கமுடியாது. எனக்கு தெரிந்த விசயங்களை வைத்து தான் சொல்லுகிறேன்.
நீங்களே கொஞ்சம் அமைதியாக அமர்ந்துக்கொண்டு அல்லது படுத்துக்கொண்டு சிந்தனை செய்து பாருங்கள். உங்களுக்கு இது புரியும். இதனைப்பற்றி நிறைய கருத்துக்களை வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Vaalthukal. pala piravi irupathu yatru kola mudikerathu. mudal pirapuku yathu aatharamaga irukerathu.aya.
Post a Comment