வணக்கம்!
பூர்வபுண்ணியவீடான ஐந்தாவது வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை வந்துவிடகூடாது. தீயகிரகங்களின் பார்வை வந்துவிட்டால் அதனால் அந்த வீடு கெட்டுவிடும். ஐந்தாவது வீடு சுபவீடாக இருந்து தீயகிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் அவர்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும். நல்ல ராசிக்காரன் அவன் கை பட்டால் நல்லது அவரை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு ஐந்தாவது வீடு நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.
ஒரு சிலருக்கு ஐந்தாவது வீடு நன்றாக இருந்து அந்த வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை வரும்பொழுது அடுத்தவர்களால் அவர்களின் சொத்து பறிபோகுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. பல இடங்களில் சொத்தை பங்காளிகள் அல்லது அவர்களின் உறவினர்கள் எடுத்துக்கொண்டு கொடுக்கமாட்டார்கள் அதற்க்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.
ஒரு சிலருக்கு செவ்வாய் மற்றும் சனியின் பார்வை ஐந்தாவது வீட்டிற்க்கு வரும்பொழுது அவர்களின் சொத்து ஊர் அளவுக்கு இருந்தாலும் தற்பொழுது வசிப்பது வாடகை வீடாக இருக்கும். வாடகை வீடாக இருந்தாலும் அதிலும் அடிக்கடி மாறவேண்டிய ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
இந்த நிலம் எல்லாம் எனது மூதையர்களின் சொத்து இதனை வைத்திருந்தாலே நாங்கள் வேலைக்கும் போகவேண்டியதில்லை. வீடடிலேயே உட்கார்ந்திருக்கலாம். எங்களின் அப்பா அனைத்தையும் விற்றுவிட்டார் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா அதற்கு எல்லாம் இது தான் காரணமாக இருக்கும்.
மேலே சொன்னபடி உங்களின் வாழ்க்கையில் இருந்தால் நீங்கள் இந்த பூர்வபுண்ணிய பரிகாரத்தில் கலந்துக்கொள்ளலாம். உங்களின் குடும்ப ஜாதகங்களை அனைத்தும் அனுப்பி கலந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment