Followers

Friday, June 16, 2017

முன்ஜென்மம் கேள்வி & பதில்


ணக்கம்!
          முன்ஜென்மத்தைப்பற்றி முழுமையாக தெரியும் என்று நினைத்து இருந்தோம் ஆனால் தகவல் குறைவாக இருக்கின்றன என்று நண்பர் ஒரு கேட்டார்.

கண்டிப்பாக நிறைய தகவல்களை தருகிறேன். அதே நேரத்தில் நமது விதிப்படி நிறைய தகவல்களை கொடுத்தால் அது பல இடத்திற்க்கு காப்பி செய்து அனுப்பிவிடுவார்கள் என்ற பயமும் ஒருபுறம் இருப்பதால் தான் நிறைய விசயங்களை குறைத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

முன்ஜென்மத்தில் உள்ள முக்கிய விசயம் என்ன என்றால் அதனை கொஞ்சம் தெரிந்துக்கொண்டு அதில் உள்ள புண்ணியங்களை எடுப்பதற்க்கு என்ன வழி என்பதை மட்டும் நாம் பார்த்தால் நமக்கு நிறைய பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் நிறைய சோதிடதகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்து வைத்திருந்தாலும் இப்படிப்பட்ட தகவல்கள் உங்களை மேலும் மேலும் நன்றாக செயல்படவைக்கும் என்பதால் இப்படி எழுதுகிறேன்.

சுக்கிரன் ஐந்தில் சம்பந்தப்படும்பொழுது நம்மை சுற்றி அல்லது நாம் வேலை செய்யும் இடங்கள் எல்லாம் கொஞ்சம் அல்ல அதிகமாகவே பெண்களாக இருப்பார்கள். பெண்களோடு இருக்கவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு இருக்கும்.

பெண்களுக்கு சேவை செய்யும் விதமாக அல்லது அவர்களுக்கு வேலை செய்யும் விதமாக உங்களுக்கு அமைந்திருக்கிறான் இறைவன் என்றால் அது உங்களி்ன் முன்ஜென்மத்தில் உள்ள பிறவியின் தொடர்பால் தான் இருக்கும் என்பது தான் உண்மையான தகவல். அப்பொழுது உங்களின் பிறப்பு முன்ஜென்மத்தில் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறது.

நான் மதியம் இந்த பதிவை தந்தபிறகு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு எங்களுக்கு இப்படி தான் இருக்கின்றது என்று சொன்னார்கள். அதுவே எனக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது. தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வாருங்கள். உங்களுக்கு பிடிப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: