Followers

Friday, August 11, 2017

நோயும் மாதமும்


ணக்கம்!
          ஒரு சில நேரங்களில் நாம் ஆறாவது வீட்டு அதிபதி மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. காலநிலைகளையும் கணக்கில் கொண்டு செயல்படும்பொழுது அது துல்லியமான கணிப்பை கொடுக்கும்.

உதாரணமாக சூரியனின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு தமிழ்மாதங்களுக்கு தகுந்தமாதிரி உலகசெயல்பாடு மாறிவருகின்றது. ஆடி மாதம் ஆரம்பித்தாலே நோய்களின் தீவிரமும் அதிகரிக்கும்.

ஆடி மாதத்தில் இருந்து நோய்களின் தாக்கம் அதிகரித்து அது தை மாதம் வரை செல்லும். அதன்பிறகு நோய்களின் தாக்கம் குறைய தொடங்கும். இந்த காலங்கள் மழை மற்றும் பனி என்பதால் வருகின்றது என்று சொல்லுவார்கள் ஆனால் அது அனைத்தும் சூரியனை அடிப்படையாக தான் இருக்கின்றன.

ஒவ்வொரு தமிழ்மாதத்திற்க்கு தகுந்த மாதிரி நோய்கள் வருவது கூட நிகழும். அதாவது உங்களுக்கு ஆவணி மாதத்தில் நோய் வருகின்றது என்றால் அடுத்தவருடமும் அதேபோல் வேறு நோய் வரலாம். சூரியன் நிலை அந்த மாதம் உங்களுக்கு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

சூரியனின் நிலையை வைத்து ஒரு சில காரியங்கள் இயற்கையாகவே நடைபெறுவதும் உண்டு. அவர் அவர்களின் ஜாதகத்தில் உள்ள நிலைப்படி அதனை கண்டறிந்து செயல்பட்டால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: