வணக்கம்!
ஒரு தொழில் செய்பவர்கள் குருவை வழிபடுவதை விட சுக்கிரனை வழிபட்டு நன்றாக வளரமுடியும். நிறைய பணக்காரர்கள் சுக்கிர கிரகத்தை வைத்து முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் விருப்படுகின்றனர்.
சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு தான் காரகம் வகித்தாலும் எல்லா தொழில் செய்பவர்களும் சுக்கிரனை வணங்குகின்றனர். எல்லாவற்றிக்கும் சக்தி என்பது தேவை. சக்தி வழிபாடு என்பது சுக்கிரனின் வழிபாட்டில் வருவதால் அனைவரும் சக்தி வழிபாட்டை மேற்க்கொள்கின்றனர்.
ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல சக்தி வழிபாடு முக்கியமாக இருக்கின்றது. சக்தி இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு மாற்றம் கிடைக்கும். எல்லாவிதத்திலும் சக்தி என்பது தேவை. தைரியமாக இருந்தாலும் சரி பணம் வேண்டுமானாலும் சரி அனைத்திற்க்கும் சக்தி தேவை.
அம்மன் வழிபாடு தான் சுக்கிரனின் காரத்துவத்தை தரும் என்பதால் அம்மனை நாம் வழிபட்டு சுக்கிரனின் ஆற்றலை பெறலாம். சுக்கிரன் காரத்துவம் தரும் இடங்களுக்கு சென்றாலும் இந்த ஆற்றலை பெறமுடியும்.
மாதத்திற்க்கு ஒரு முறையாவது சுக்கிரன் காரத்துவம் தரும் இடங்களுக்கு சென்று வாருங்கள். அந்த காரத்தவத்திற்க்கு சென்றவுடன் உங்களுக்கு சுக்கிரனின் காரத்துவத்தால் உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Gud Morning sir.. Sukran Karaga Places.. Cinema Theatres, Malls, Theme Parks, And all entertainment Places...
Post a Comment