Followers

Wednesday, August 2, 2017

வாழ்க்கை மாற்றம்


ணக்கம்!
          வாழ்க்கையில் மாற்றம் என்பது வேண்டும் என்பதற்க்காக தான் அனைவரும் போராடுகின்றனர். இதனை தான் நாங்கள் பிறர்க்கு செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஒருவர் சைக்கிளில் செல்கிறார் என்றால் அவர் பைக் வாங்கி செல்வதற்க்கு அதிக சக்தி பிடிக்கும். பைக்கில் செல்பவர் கார் வாங்கி செல்ல அதிக சக்தி பிடிக்கும். ஒன்றில் இருந்து மாற்றோன்றுக்கு மாறுவதற்க்கு சக்தி தேவைப்படும்.

வாழ்க்கை முழுவதும் பைக்கில் சென்றுக்கொண்டு இருந்தால் அதுபோலவே உங்களின் வாரிசுகளுக்கும் நடக்கும் என்பது உண்மையான ஒன்று. ஒருவர் எப்படி வாழ்கிறார்களோ அதுபோலவே அவர்களின் வாரிசுகளுக்கும் முக்கால்வாசி அமைந்துவிடுகிறது.

ஒரு வீட்டில் ஒரு வசதி இருந்தால் அந்த வசதிப்படி தான் எங்கு சென்றாலும் அமையும். இது கிரகங்கள் செய்யும் வேலையா அல்லது உலகவிதியா என்று சொல்லமுடியாது அப்படி தான் இருக்கும்.

நம்மை சந்திக்கும் வரும் நண்பர்களிடம் சொல்லுவது பைக்கில் வந்தால் எப்பொழுது காரில் வரப்போகின்றீர்கள் என்று கேட்பேன். காரில் வந்தால் எப்பொழுது சொகுசு கார் வாங்க போகின்றீர்கள் என்று கேட்பேன்.

ஒரு நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்றால் எப்படியாவது அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்று நினையுங்கள். இந்த மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் மேலே சென்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: