வணக்கம்!
எந்த ஒரு ஜாதகருக்கும் சரி அவரின் ஜாதகத்தில் மறைவுஸ்தான அதிபதி தசா நடந்தால் அவர் கொஞ்சம் பொறுமையாக நடந்துக்கொள்ளவேண்டும். உங்களின் வீட்டில் உள்ளவர்களிடமும் நீங்கள் அமைதியாக நடந்தால் தான் உங்களுக்கு நல்லது.
ஒரு சிலர் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு அவர்கள் தற்கொலை முயற்சிக்கு கூட இந்த தசா தூண்டிவிட்டுவிடும். நீங்கள் உங்களின் கடமையை செய்யமுடியாமல் நீங்கள் போய் சேரவேண்டியது தான். அதுவும் குழந்தைகள் இருந்தால் மிகவும் கடினமாக போய்விடும். இல்லறத்தலைவன் இல்லை என்றால் குழந்தைகளின் நிலை மிகவும் கடினமாகிவிடும்.
தற்கொலை தூண்டாமல் கூட ஒரு சில இடத்தில் உங்களுக்கு மனஉளைச்சலை தூண்டிவிட்டு உங்களுக்கு ஹர்ட்அட்டாக் வரவழைத்துவிடும். இதிலும் பலர் உயிர்விட்டு இருக்கின்றார்கள்.
பொதுவாக மறைவுஸ்தான தசா வேலை செய்யும்பொழுது உங்களின் மனைவி ஒத்துழைக்க மாட்டார். எதிலும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். உங்களுக்கு வாழ்க்கையை பற்றியே பல சிந்தனை இருக்கும்பொழுது அதோடு இவரும் சண்டைப்போட்டால் உங்களின் நிலை சொல்லவேண்டியதில்லை.
மறைவுஸ்தான அதிபதியின் தசா நடக்கும்பொழுது என்ன தான் நடந்தாலும் சரி நீங்கள் அமைதியாகிவிடுங்கள். உங்களின் மனைவி உங்களை அடிக்க வந்தால் கூட நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அது தான் உங்களின் ஆயுளுக்கு நல்லது. உங்களின் குடும்பத்திற்க்கும் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment