Followers

Monday, August 7, 2017

திருவோண நட்சத்திரம்


வணக்கம்!
           சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரம் ஒரு நல்ல நட்சத்திரம் என்று சொல்லலாம். திருவோணம் மகர ராசியில் வருகின்ற நட்சத்திரம். பொதுவாக திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வித உதவியும் இல்லாமலே உயர்ந்த வாழ்க்கையை அடைந்துவிடுவார்கள்.

இளமையில் அதிக கஷ்டத்தை தரும் ஆனால் 35 வயதிற்க்கு மேல் அதிகமான செல்வளத்தை கொடுத்துவிடும். இவர்களின் தந்தை பாட்டானார் எதுவும் சொத்து சேர்த்து வைத்திருக்க மாட்டார்கள். சொத்து இருந்தால் கூட அந்தளவுக்கு கண்டுக்கொள்ளமாட்டார்கள்.

இவர்களே கஷ்டப்பட்டு உழைத்து பெரியளவில் முன்னேற்றத்தை அடைந்துவிடுவார்கள். இளமையில் கஷ்டம் வருவதற்க்கு காரணம் இளமையில் வரும் ராகு தசா தான் காரணமாக இருக்கும். ராகு தசாவை கடந்துவிட்டால் இவர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

திருவோண நட்சத்திரத்தில் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமும் மிகச்சிறப்பான ஒரு பலனை வழங்ககூடியதாகவே இருக்கும். வழிபாடுகளும் சிறப்பான ஒரு பலனை கொடுக்ககூடிய நட்சத்திரம் தான். திருவோணத்தை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்று நமது அம்மன் கோவிலில் வனபூஜை செய்யப்படுகிறது. அந்த வேலையில் இருப்பதால் இன்று நிறைய பதிவுகளை கொடுக்கமுடியாது என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் உங்களுக்கு பதிவை தந்துவிடுகிறேன். வனபூஜை என்பது கோவிலுக்குரிய பங்காளிகள் இணைந்து பூஜை செய்வது தான் வனபூஜை. வருடத்திற்க்கு ஒரு முறை இது நடைபெறும்.

வரும் வாரத்தில் அம்மனுக்கு நம்மால் பூஜை செய்யப்படும். ஆடி மாத்திற்க்கு அனைவரையும் காணிக்கை அனுப்ப சொல்லுவேன். மாதந்தோறும் அனுப்பவர்கள் மட்டுமே அனுப்பியுள்ளனர். வேறு யாரும் அனுப்பவில்லை. உடனே அனுப்பி வையுங்கள் என்று அன்போடு  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: