வணக்கம்!
நேற்று சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு விசயத்தை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதனை ஜாதககதம்பத்தில் சொல்லவேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு ஆனால் அதனை எழுதுவதற்க்கு நேரம் வரவில்லை. பெரிய விசயம் கிடையாது ஆனால் அது என்னைப்பற்றிய ஒன்று.
பல வருடங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறேன். சோதிடத்தையும் பார்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை என்னுடைய ஊரில் உள்ளவர்களுக்கு நான் ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லியது கிடையாது. எந்த ஒரு ஆன்மீக வழியிலும் வேலை செய்தது கிடையாது. எங்கள் ஊரில் வந்து என்னை கேட்டால் கூட தெரியாது.
என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கிறீர்களா
உண்மையான ஒன்று. என்னை தேடி வெளியூரில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரையும் தஞ்சாவூரில் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவது உண்டு. ஊரில் எதுவும் சந்திப்பது கிடையாது. வெளியூரில் எனக்கு நிறைய பேர்கள் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். உள்ளூரில் வைத்துக்கொள்வது கிடையாது.
ஜாதககதம்பத்தில் இருந்து இதுவரை அதிகப்பட்சம் ஏழு பேர் என்னுடைய வீட்டிற்க்கு வந்திருக்கலாம் அதற்கு மேல் ஒருத்தரும் வந்தது கிடையாது. தொடர்ந்து என்னுடைய வீட்டிற்க்கு வரும் நபர்கள் மிககுறைவானவர்கள். இரண்டு அல்லது மூன்று இங்கு கூட்டத்தை கூட்டினால் ஒன்றும் நடைபெறாது. பேர்கள் வரலாம் அவ்வளவு மட்டுமே.
ரொம்ப உஷாராக இருக்கின்றீர்களா என்று நினைக்கலாம்.
உண்மையில் அது தவறான ஒன்று. என்னை சந்திக்க நிறைய பேர்கள் வந்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு நடக்கின்ற எந்த ஒரு வேலையும் நடைபெறவே நடைபெறாது என்பது தான் உண்மை. நான் இங்கு பிரீயாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும்.
உள்ளூரில் எதுவும் கிடையாது அனைத்தையும் வெளியூரில் உள்ளவர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை வருடங்கள் இதனை நடத்திக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு எல்லாம் பரிகாரங்கள் செய்து அது நடக்கின்றது என்றால் நான் இங்கு அமர்ந்து உங்களாக செய்யும் வேலையில் இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment