வணக்கம்!
ஆறில் குருவைப்பற்றி சொல்லிருந்தீர்கள். அது எனக்கு சரியாக இருக்கின்றது அதற்கு பரிகாரம் என்ன என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இதனை பரிகாரம் மட்டும் கொண்டு சரி செய்துவிடமுடியாது. அதற்கு மருந்தையும் சேர்த்து எடுக்கவேண்டும். செரிமானத்தைப்பற்றி சொல்லும்பொழுது செரிக்கவில்லை என்றால் அதற்கு மருந்து தான் தீர்வாக இருக்கமுடியும்.
பரிகாரத்தில் உணவையும் சொல்லுவார்கள். உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதையும் சொல்லுவார்கள். நீங்கள் உணவு எடுக்கும்பொழுதும் சரியான உணவை எடுக்கவேண்டும் அதன் பிறகு பரிகாரத்தையும் செய்யவேண்டும்.
நம்ம ஆளுங்க பரிகாரம் மட்டும் செய்தால் போதும் என்று இருந்துவிடுவார்கள். உணவை சரி செய்யமாட்டார்கள். உணவையும் சரி செய்யவேண்டும். இரவில் நன்றாக செரிக்க வைக்க என்ன செய்யவேண்டுமாே அதனை செய்யுங்கள்.
குருவிற்க்கு பரிகாரம் என்று சொல்லுவதை விட உங்களுக்கு ஆன்மீகம் எந்தளவுக்கு வருகின்றது என்று பார்க்கவேண்டும். மறைவுஸ்தானத்தில இருந்து குரு வேலை செய்யும்பொழுது எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கவேண்டும்.
உங்களின் பூர்வபுண்ணியாதிபதி வீட்டை சரி செய்யவேண்டும். குரு இல்லை என்றால் பூர்வபுண்ணியாதிபதி நன்றாக வேலை செய்தால் எளிமையாக இது இருக்கும் என்று சொல்லுகிறேன். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து முடிவு செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment