வணக்கம்!
எந்த ஒரு வித்தை தெரிந்தாலும் சரி அந்த வித்தை தெரிந்த காரணத்தால் ஒரே ஆட்டம் ஆடிவிடகூடாது. மெதுவாக தான் ஆடவேண்டும். நிறைய வித்தைகளை கொடுப்பதற்க்கு காரணமாக இருப்பவர் சுக்கிரன். சுக்கிரனின் ராசியை கொண்டவர்கள் அல்லது சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு நிறைய ஆன்மீகம் மற்றும் பல வித்தைகளை அவர்களுக்கு அளிப்பார்.
சுக்கிரனும் குருவை போன்று நிகரானவர். தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு அவரின் வித்தைகள் அனைத்தும் கிடைக்கும். இந்த வித்தைகளை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே அவர்களுக்கு பிரச்சினையாக முடிவடைந்துவிடும்.
சுக்கிரன் காரத்துவம் என்றாலே அது அம்மன். அம்மனை வணங்குபவர்களுக்கு அம்மன் நிறைய கொடுப்பார். அம்மன் அப்படி கொடுக்கும் வித்தையை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் அவர்களை மேலும் மேலும் உயர்த்திவிடும்.
சுக்கிரன் அசூரர்களுக்கு குருவாக இருப்பதால் அசூரர்கள் கடைசியில் தேவையில்லாத ஒரு விசயத்தில் தன்னை ஈடுபடுத்தி அதனால் அழிவது போல நம்ம ஆளுங்களும் அழிவார்கள். அம்மன் கொடுப்பதால் ஆட்டம் போடாமல் அமைதியாக கடைசி வரை இருந்தால் நல்லது.
பொறுமையாக இருந்தால் சுக்கிரன் நிறைய கொடுப்பார். கொடுத்ததை பொறுமையாக இருந்து அதனை பயன்படுத்த வேண்டும். பொறுமையை மட்டும் கடைப்பிடித்தால் சுக்கிரன் உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்திவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment