Followers

Friday, August 4, 2017

கடனும் சண்டையும்


வணக்கம்!
          ஒருவருக்கு கடனை கொடுக்கும் வீடாக ஆறாவது வீடு இருக்கின்றது. அந்த வீட்டில் சுக்கிரன் சம்பந்தப்பட்டால் அவர் தன்னுடைய வீட்டிற்க்காக கடன்பட நேரிடும். ஒருவர் வீடு கட்டினால் கண்டிப்பாக அவருக்கு கடன் வாங்க நேரிடும். அதிகப்பட்ச நபர்களுக்கு இப்படி தான் நடக்கிறது. வீடு கட்டினாலும் வீடு வாங்கினாலும் கடன் வாங்க நேரிடும்.

கடன் வாங்கினால் அது பெண்களாக பார்த்து வாங்கிவிடகூடாது. சுக்கிரன் ஆறாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது கடன் வாங்குவது பெரும்பாலும் பெண்களாக இருக்கும். பெண்கள் வழியாக நமக்கு கடன் கிடைக்கும்.

பெண்களிடம் கடன் வாங்குவது நல்லதல்ல. கடனை கேட்கும் பெண் அமைதியானவராக இருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் வன்முறையானவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அவமானம் பட நேரிடும்.

ஒரு சிலர் தன்னுடைய மனைவியின் வழியில் கடனை வாங்கிவிடுவார்கள். ஒரு சிலர் மனைவியின் நகைகளை வாங்கி விற்றுவிட்டு வீட்டிற்க்கு போடும்பொழுது பிறகு மனைவியின் குடைச்சல் அவர்க்கு கிடைத்துவிடும்.

ஆறாவது வீடு கடன் மட்டும் இல்லை அதன் வழியாக தான் சண்டை யும் வருகின்றது. ஆறாவது வீட்டின் வழியாக கடனை வாங்கினால் ஒழுங்காக திருப்பிக்கொடுத்தவிட்டால் நல்லது அப்படி இல்லை என்றால் அதன் வழியாக சண்டையும் வரும்.

பல இடங்களில் வட்டிக்கு வாங்கி அதனால் சண்டை வருவதற்க்கு காரணமாக இருப்பது ஆறாவது வீட்டின் காரணமாக தான் வருகின்றது. கடன் வாங்கும்பொழுதே அதனை எப்படி திருப்பிக்கொடுக்கவேண்டும் அல்லது நீண்டநாளாக இருந்தால் எப்படி அதனை அடைப்பது யாரிடம் கடன் வாங்குவது என்பதைப்பற்றி யோசித்துவிட்டு கடன் வாங்கினால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: