வணக்கம்!
ஆறாவது இடத்தில் இருந்து தான் நோய் வரும் என்று தெரியும். ஒரு சில காலங்களில் ஒரு சில இடங்களில் அது பொதுவாகவும் வரும். அந்தந்த இடத்தை பொறுத்து இது அமைகிறது.
தற்பொழுது டெங்கு காய்ச்சல் வருகின்றது. இது எங்கு அதிகம் இருக்கின்றது என்றால் சேலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இது அதிகம் இருக்கின்றது என்று சொல்லுகின்றனர். இதற்கு முன்பு டெங்கு காய்ச்சல் கன்னியாகுமரி பகுதி மற்றும் தென் தமிழகத்தில் இது இருந்தது.
தற்பொழுது மேலே சொன்ன இடத்தில் இந்த நோய் அதிகம் இருக்கின்றது என்று செய்தியில் படிக்கிறோம். பொதுவாக டெங்கு காய்ச்சல் என்றாலே அது கொசுவிடம் இருந்து தான் வருகின்றது என்று தெரியும். தமிழ்நாட்டில் கொசு எல்லா இடத்திலும் இருக்கின்றது ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி இந்த நோய் வருகின்றது.
நீங்களே செய்தியை படிக்கும்பொழுது அல்லது பார்க்கும்பொழுது இது நன்றாக தெரியும். சுத்தம் மற்றும் அசுத்தம் எல்லா இடத்திலும் இருக்கும் ஆனால் நோய் குறிப்பிட்ட பகுதியில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆன்மீக ரீதியில் நிறைய இதனை சொல்லலாம் ஆனால் அது எல்லாம் நமக்கு தேவையில்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோய் தாக்கும்பொழுது நமக்கு நேரம் சரியில்லை என்றால் அந்த பகுதிக்கு செல்லும்பொழுது நமக்கு வந்துவிடும்.
காய்ச்சல் தாக்கப்பட்டவர்களின் ஜாதகத்தை நாம் எடுத்து பார்த்தால் அவர்களுக்கு ஆறாவதுவீட்டு அதிபதி செவ்வாய் மற்றும் சனி இதன் தொடர்போடு நோய் வந்திருக்கும். ஆறாவது வீடு மட்டும் இல்லாமல் அந்தந்த பகுதி அந்த பகுதியில் வாழும் மோசமான ஜாதகர்களுக்கு கண்டிப்பாக இந்த மாதிரியான நோய் வரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment