Followers

Thursday, August 10, 2017

நோயும் மருத்துவமும்


ணக்கம்!
          ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் இருந்து தான் நோயையும் கண்டறியிறோம் என்பது உங்களும் தெரியும். ஒருவருக்கு நோய் வருவதற்க்கு முன்பு சோதிடத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.  சோதிடம் பார்ப்பவர்களுக்கே இதனைப்பற்றி பல விசங்களில் தோற்றுவிடுவோம் என்பது தான் உண்மை. எப்படி இருந்தாலும் ஒரளவு கணித்து சொல்லிவிடலாம்.

ஒரு நோய் வந்தவுடன் உடனே நாம் மருத்துவரை அணுகி அதற்கு மருந்து எடுத்துக்கொள்கிறோம். இது உலகத்தில் உள்ள அனைவரும் செய்யும் ஒரு செயல். நோய் வந்தவுடன் மருந்துவரை பார்த்தவுடன் அது போய்விட்டால் நமக்கு நோய் போய்விட்டது என்று இருந்துவிடுவோம்.

ஒரு மருத்துவரை நாம் நாடி சென்றவுடன் போய்விட்டாலும் அது மறுபடியும் வேறு விதத்தில் நம்மை தாக்க ஆரம்பித்துவிடும். அதனையும் நீங்கள் யோசித்துவிட்டு செல்வது நல்லது. எந்த மருத்துவத்தை தேர்ந்தெடுப்பதில் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

நோய் வந்தவுடன் ஒரு நல்ல அனுபவம் உள்ளவர்களை நாம் தொடர்புக்கொண்டால் அவர்கள் நல்ல ஒரு தீர்வை கொடுக்கின்றனர். அதாவது நமக்கு அந்த நோய் திரும்ப வரவே வராது அதோடு நமக்கு மறுபடியும் அந்த பிரச்சினை இருக்காத மாதிரி நல்ல தீர்வை கொடுக்க மருத்துவம் இருக்கின்றது. அப்படிப்பட்டவர்களை நாடி நீங்கள் தீர்வை எடுத்துக்கொண்டால் நல்லது.

ஆறாவது வீடு என்பது அந்த நேரத்தில் தான் தலை தூக்கும் அதன்பிறது அது வராது என்று மட்டும் நினைக்காதீர்கள். ஆறாவது வீட்டிற்க்கு நல்ல தீர்வை நல்ல புத்திசாலிதனத்தோடு தேடும்பொழுது  ஆறாவது வீடு வேலை செய்யாமல் செய்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: