Followers

Sunday, August 6, 2017

பணக்காரர் விளக்கம்


வணக்கம்!
          ஒரு சிலர் நேற்று எழுதிய யார் பணக்காரர் என்ற பதிவை படித்துவிட்டு பாராட்டி சொன்னார்கள். ஒரு சிலர் நாங்கள் அதற்கு முயற்சி செய்கிறோம் ஆனால் அது நடக்க மாட்டேன்கிறது என்றும் சொன்னார்கள்.

நம்முடைய கனவு அந்தளவுக்கு இருக்கும்பொழுது கண்டிப்பாக ஒரு கட்டத்தில் நாம் வெற்றி பெற்றுவிடலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஆன்மீகவழியிலும் நீங்கள் சரி செய்யும்பொழுது கண்டிப்பாக அது எளிதில் கிடைத்துவிடும்.

ஒரு சிலர் சிக்கலை வைத்துக்கொண்டு தான் சம்பாதிக்கவே முயல்கின்றனர். நான் தொழில் செய்பவர்களுக்கு என்று செய்யும்பொழுது வந்தது அனைவரும் நிறைய பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வந்தனர். ஆரம்பக்கட்ட காலத்தில் இப்படிப்பட்டவர்கள் வந்தனர்.

ஒரு தொழில் செய்து அதில் பெரியளவில் கடனை வாங்கிவிட்டு ஒரு பூஜையில் அதனை நிவர்த்தி செய்ய என்னை சந்தித்தனர். அதில் இருந்து மீள்வது என்பது அந்தளவுக்கு எளிதில் நடைபெறக்கூடிய செயல் அல்ல.

தற்பொழுது தான் நிறைய தொழில்களை நாம் நல்ல தொழில் முனைவர்களை எடுத்து அதற்கு தகுந்த மாதிரி செய்துக்கொண்டு இருக்கிறோம். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னுடைய நோக்கம் இருந்ததனை செயல்படுத்தும்பொழுது முதலில் பல தடைகளை தாண்ட வேண்யிருந்தது. 

இன்று அனைத்து தொழில்களும் வெற்றியாக இருக்கின்றது. இன்னமும் செல்லவேண்டிய தூரம் அதிகமாக இருக்கின்றது சென்றுக்கொண்டு இருக்கிறேன். அனைத்தையும் நமக்கு ஒரு அனுபவமாக கற்றுக்கொடுத்தது இங்கு இருக்கும் நண்பர்கள் தான். 

ஒரு சிலர் செய்கின்ற வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கவேண்டும் என்று வருவார்கள். அவர்களுக்கு எல்லாம் முதலில் செல்லுவது தொழில் என்றால் அந்தளவுக்கு எளிமையாக இருக்கும் என்று மட்டும் கணக்கு போட்டுவிடாதீர்கள். வேலையை விட தொழிலில் அதிக சவாலை சந்திக்கவேண்டியிருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: